எலும்புகூடுடன் போட்டோ செஷன் நடத்திய த்ரிஷியம் நடிகை...அலறும் நெட்டிசன்கள்
திருவனந்தபுரம் : மலையாளத்தில் 2013 ல் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியான த்ரிஷியம் படத்தின் இரண்டாம் பாகம் பிப்ரவரி 19 ம் தேதி ஓடிடி தளத்தில் அமேசான் பிரைம் வீடியோவில் வெளியிடப்பட்டது.
இந்த படத்திலும் மோகன்லால், மீனா, அன்சிபா, எஸ்தர் அனில் ஆகியோர் நடித்துள்ளனர். முதல் பாகத்தை போன்றே இரண்டாம் பாகமும் சினிமா பிரபலங்கள், ரசிகர்கள், விமர்சகர்கள் இடையே நல்ல வரவேற்பையும், பாராட்டையும் பெற்றது.

த்ரிஷியம் இரண்டாம் பாகமும் வெற்றி அடைந்துள்ளதால் ஏகப்பட்ட சந்தோஷத்தில் இருக்கிறார், மோகன்லாலின் மூத்த மகளாக நடித்த அன்சிபா. இதனால் ரசிகர்களின் கவனத்தை மேலும் ஈர்க்க, எலும்புகூடுடன் போட்டோஷூட் செஷன் நடத்தி உள்ளார்.
https://www.instagram.com/p/CMKAsqQJlLd/
இந்த படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் அவர் வெளியிட்டுள்ளார். அத்துடன், நல்ல கேப்ஷனுக்காக காத்துக் கொண்டிருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். இதனை பார்த்து ரசிகர்கள் பலரும் பல விதமாக கருத்து பதிவிட்டுள்ளனர். ஒருவர் வருணின் எலும்புக் கூடா என கேட்டுள்ளார். மற்றவர் ஒரு வழியாக அவர் மீண்டும் வருணுடன் சேர்ந்து விட்டார் போல என கேட்டுள்ளார்.
அதே சமயம் த்ரிஷியம் மூன்றாம் பாகத்தையும் எடுக்க டைரக்டர் ஜீத்து ஜோசப் நினைத்துக் கொண்டிருப்பதாக படத்தின் தயாரிப்பாளர் ஆன்டனி பெரும்பாவூர் தெரிவித்துள்ளார். இதனால் த்ரிஷியம் 3 லும் தனக்கு வாய்ப்பு கிடைக்கும் என அன்சிபா பலமாக நம்புகிறார்.


Click it and Unblock the Notifications











