twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஊர்ல நடக்கிற எல்லா கொலைக்கும் நானா காரணம்? த்ரிஷ்யம் இயக்குனர் காச் மூச்!

    By
    |

    கொச்சி: ஊரில் நடக்கும் எல்லா கொலைக்கும் நானா காரணம்? என்று த்ரிஷ்யம் பட இயக்குனர் ஜீத்து ஜோசப் ஆவேசமாகக் கேட்டார்.

    மோகன்லால், மீனா நடித்த த்ரிஷ்யம் படத்தை இயக்கியவர் ஜீத்து ஜோசப். இந்த படம் இந்தி உட்பட 5 மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது. தமிழில் கமல்ஹாசன் நடிப்பில் பாபநாசம் என்ற பெயரில் ரீமேக் ஆனது. இதை ஜீத்து ஜோசப்பே இயக்கியிருந்தார்.

    Drishyam director asks, Am I responsible for all murders in kerala?

    இப்போது கார்த்தி, ஜோதிகா நடித்துள்ள தம்பி படத்தைத் தமிழில் இயக்கியுள்ளார். இதில் சத்யராஜ், நிகிலா விமல் உட்பட பலர் நடித்துள்ளனர். வரும் 20 ஆம் தேதி இந்தப் படம் ரிலீஸ் ஆகிறது. இதன் பத்திரிகையாளர் சந்திப்பு கொச்சியில் இன்று நடந்தது.

    அப்போது, த்ரிஷ்யம் படத்தின் ஸ்டைலில் கேரளாவில் கொலைகள் நடப்பது அதிகரித்துவிட்டது என்று கேள்வி கேட்கப்பட்டது. இதை எதிர்பார்க்காத ஜீத்து ஜோசப் அதிர்ச்சி அடைந்தார்.

    உடம்பிலேயே ரொம்ப செக்ஸியஸ்ட் வளைவு எது தெரியுமா? கண் கூசும் உடையில் ஆன்ட்டி நடிகை அட்டகாசம்!உடம்பிலேயே ரொம்ப செக்ஸியஸ்ட் வளைவு எது தெரியுமா? கண் கூசும் உடையில் ஆன்ட்டி நடிகை அட்டகாசம்!

    அவர் கூறும்போது, இந்த படம் இந்தியில் ரீமேக் ஆகியுள்ளது. அதனால் வட மாநிலங்களில் நடக்கிற கொலைகளுக்கும் நானே காரணமா? த்ரிஷ்யம் படம் பார்த்துவிட்டுதான் கொலை செய்கிறார்கள் என்று நினைக்கிறீர்களா? மீடியா செய்திதான் இந்தக் கதை உருவாக எனக்கு இன்ஸ்பிரேஷன். அதற்காக மீடியாவை குற்றம் சொல்ல முடியுமா? என்றார் ஆவேசமாக.

    பின்னர் கொரிய படத்தின் தழுவல்தானே, த்ரிஷ்யம் என்ற கேள்விக்கு, அது வேறு கதை, இது வேறு கதை. கொரிய படத்தின் தழுவல் என்றால் சீன மொழியில் ரீமேக் செய்வார்களா? ரீமேக் உரிமைக்காக எங்களை சந்தித்திருப்பார்களா? என்று கேட்டார் ஜீத்து ஜோசப்.

    English summary
    Director Jeethu Joseph lashed out against linking his movie Drishyam as reference to all murders in Kerala.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X