twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    தென்னிந்திய மொழிகளில் கலக்கிய திரிஷ்யம்.. இந்தியில் வீழ்ந்தது.. ஏன்?

    By Manjula
    |

    மும்பை: தென்னிந்திய மொழிகளான தமிழ்,தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய 4 மொழிகளிலும் வெளியாகி மாபெரும் வெற்றியைச் சுவைத்த திரைப்படம் திரிஷ்யம். ஆனால் இந்தியில் சொதப்பி விட்டது.

    மலையாளத்தில் இயக்குநர் ஜீது ஜோசப் இயக்கிய இந்தப் படம் மலையாள உலகில் அடைந்த மாபெரும் வெற்றி காரணமாக மற்ற மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டது. தென்னிந்திய மொழிகளில் தரம் குறையாமல் மொழிமாற்றம் செய்யப்பட்ட இத் திரைப்படம் இந்தி உலகில் திரிஷ்யம் என்ற பெயரிலேயே வெளியாகியுள்ளது.

    அஜய் தேவ்கன், ஸ்ரேயா நடித்த இந்தப் படத்தில் சில காட்சிகளை பாலிவுட்டிற்குத் தகுந்தார் போன்று மாற்றி எடுத்திருக்கின்றனர். அதுவே வினையாகி விட்டது.

    தபுவின் நடிப்புதான் படத்தைக் காப்பாற்றி ஓட வைத்துக் கொண்டிருக்கின்றது, எந்தந்த விஷயங்களில் பாலிவுட்டினர் சொதப்பி இருக்கின்றனர் என்று பார்க்கலாம்.

    அசத்திய மோகன்லால்

    அசத்திய மோகன்லால்

    மலையாள திரிஷ்யம் படத்தில் நடிகர் மோகன்லால் அந்த பாத்திரமாகவே வாழ்ந்திருப்பார். மோகன்லால் காவல் நிலையம் செல்லும் காட்சிகள் மற்றும் ஐஜி அவரது கணவரை சந்திக்கும் இடங்கள் எல்லாம் பார்வையாளர்களுக்கும் திகில் ஊட்டக் கூடிய வகையிலேயே இருக்கும். தனது இயல்பான நடிப்பை மோகன்லால் படத்தில் அழகாக காட்டியிருப்பார்.

    சொதப்பிய அஜய் தேவ்கன்

    சொதப்பிய அஜய் தேவ்கன்

    ஆனால் ஹிந்தி திரிஷ்யத்தில் அஜய் தேவ்கனின் நடிப்பு அந்த அளவிற்கு ஒன்றும் பிரமாதமாக இல்லை என்றே சொல்ல வேண்டும். மிகவும் கனமான காட்சிகளின் போதும் கூட அந்தக் காட்சிக்கான முகபாவனை ஒன்றையும் வெளிப்படுத்தாமல் சாதாரண நடிப்பையே அளித்து இருக்கிறார்.

    உயிர் இல்லையே

    உயிர் இல்லையே

    படத்தின் முக்கியமான காட்சி ஐஜியையும் அவரது கணவரையும் சந்திக்கும் இடம் அந்தக் காட்சியில் கூட சாதாரணமாகவே முகத்தை வைத்துக் கொள்கிறார் அஜய் தேவ்கன். உயிரோட்டமான காட்சிகளையும் கூட உயிரில்லாமல் அஜய் தேவ்கன் செய்திருப்பது படத்தின் மிகப்பெரிய குறையாக உள்ளது.

    மோகன்லாலின் எளிமை

    மோகன்லாலின் எளிமை

    மலையாளத்தில் மோகன்லால் வீடு மற்றும் அவரது வாழ்க்கை முறை ஆகிய எல்லாவற்றிலும் ஒரு நடுத்தரக் குடும்பத்தை கண்முன்னே காட்டியிருப்பார் இயக்குநர் ஜீது ஜோசப்.தான் மட்டுமே வைத்திருக்கும் மொபைல் போனை குடும்பத்தினர் வெளியில் சென்றால் கொடுத்து விடுவது, வீட்டிலிருந்து வெளியே செல்லும்போது மின் சாதனங்கள் அனைத்தையும் நிறுத்தி செல்வது போன்ற சின்னசின்ன விஷயங்களில் கூட நடுத்தர வர்க்கத்தை கண்முன்னே நிறுத்தியிருந்தார் மோகன்லால்.

    அஜய் தேவ்கனின் ஆடம்பரம்

    அஜய் தேவ்கனின் ஆடம்பரம்

    ஹிந்தி திரிஷ்யத்தில் அஜய் தேவ்கனின் குடும்பத்தினர் மெத்தைகள் மற்றும் ஆடம்பரமான பொருட்களை உபயோகிப்பது போன்று மிகவும் ஆடம்பரமாகக் காட்டி இருக்கின்றனர். நடுத்தர வர்க்கம் என்று கூறிவிட்டு ஆடம்பரமாகக் காட்டுகிறோமே என்று இயக்குநர் நிஷிகாந்த் யோசித்த மாதிரி தெரியவில்லை.

    நல்ல துணை நடிகர்கள் இல்லையா?

    நல்ல துணை நடிகர்கள் இல்லையா?

    மலையாளத்தில் துணை நடிகர்கள் அவ்வளவு அழகாக அவர்களின் பாத்திரங்களை மக்கள் மனதில் பதிய வைத்திருந்தனர். கான்ஸ்டபிளாக வரும் கலாபவன் சாஜன், ஐஜியின் கணவராக வரும் சித்திக் அவ்வளவு ஏன் ஐஜியாக நடித்த ஆஷா சரத்தே தொலைக்காட்சி சீரியல்களில் நடித்தவர்தான். ஆனாலும் தனது நடிப்பால் அனைவரையும் கவர்ந்து தமிழிலும் அந்த வாய்ப்பைப் பெற்றார் ஆஷா சரத்.

    தபு அசத்தல்

    தபு அசத்தல்

    இந்தியில் தபு அசத்தி இருந்தாலும் கூட ஆஷா சரத்தின் நடிப்பிற்கு முன்பு அவர் ஜொலிக்கவில்லை என்றே கூறவேண்டும். மற்ற துணை நடிகர்கள் யாரையுமே படத்தில் காண முடியவில்லை என்பதும் ஒரு குறையே.

    தத்து மகளைக் காட்டியது தப்பு

    தத்து மகளைக் காட்டியது தப்பு

    மலையாள திரிஷ்யத்தை அப்படியே ஹிந்தியில் எடுத்திருந்தாலே நன்றாக வந்திருக்கும் அதை விட்டு படத்தில் அஜய் தேவ்கனின் மூத்த மகளை அவரது தத்து மகளாக காட்டியிருக்கிறார் இயக்குநர் நிஷிகாந்த்.

    சுவை போச்சே

    சுவை போச்சே

    இந்தக் காட்சியால் மொத்தப் படமுமே சுவை குறைந்து தோன்றுகிறது, ஒரு படத்தை அதுவும் ரீமேக்கான மொழிகளில் எல்லாம் வெற்றிக்கொடி நாட்டிய ஒரு படத்தை ரீமேக் செய்யும் போது கவனமாக கையாள வேண்டும்.

    English summary
    The Ajay Devgn-Tabu starrer shows up gigantic weaknesses of the Hindi cinema.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X