twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    தேசங்கள், மொழிகளை கடந்து புதிய வரலாறு... சாதனை படைத்த த்ரிஷ்யம்

    |

    திருவனந்தபுரம் : டைரக்டர் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால், மீனா, அன்சிபா ஹாசன், எஸ்தர் அனில், சித்திக், ஆஷா சரத் உள்ளிட்டோரின் நடிப்பில் 2013 ம் ஆண்டு வெளியான த்ரில்லர் படம் த்ரிஷ்யம். மிகப் பெரிய பிளாக் பஸ்டர் படமாக அமைந்த இந்த படத்தின் இரண்டாம் பாகம் இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் ஓடிடி தளமான அமேசான் பிரைம் வீடியோவில் வெளியிடப்பட்டது.

    எஸ்டிஆர் 48 அறிவிப்பு... ஆர்வமாய் காத்திருக்கும் சிம்பு ரசிகர்கள் எஸ்டிஆர் 48 அறிவிப்பு... ஆர்வமாய் காத்திருக்கும் சிம்பு ரசிகர்கள்

    இந்த படமும் மிகப் பெரிய வெற்றி படமாக அமைந்து, பலரின் பாராட்டை பெற்றதை தொடர்ந்து இந்த படத்தை தியேட்டரிலும் ரிலீஸ் செய்ய படக்குழு முடிவு செய்தது. த்ரிஷ்யம் படத்தின் இரண்டு பாகங்களையும் ஆன்டனி பெரும்பாவூர் தான், ஆசிர்வாத் சினிமாஸ் பேனரில் தயாரித்திருந்தார்.

    4 மொழிகளில் ரீமேக்

    4 மொழிகளில் ரீமேக்

    த்ரிஷ்யம் படத்தின் முதல் பாகத்தின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் இந்த படம் ரீமேக் செய்யப்பட்டு, அனைத்தும் சூப்பர் ஹிட் ஆகின. இந்திய மொழியில் மட்டுமல்ல சீன மற்றும் சிங்கள மொழியிலும் த்ரிஷ்யம் படம் ரீமேக் செய்யப்பட்டு, வெற்றி பெற்றது.

    வரலாறு படைத்த த்ரிஷ்யம்

    வரலாறு படைத்த த்ரிஷ்யம்

    இந்நிலையில் த்ரிஷ்யம் படம் வெளியான 8 ஆண்டுகளுக்கு பிறகு இந்த படம் இந்தோனேஷிய மொழியில் ரீமேக் செய்யப்பட உள்ளதாம். இப்படி இந்தோனேஷிய மொழியில் ரீமேக் செய்யப்பட உள்ள முதல் மலையாள படம் என புதிய வரலாற்றை த்ரிஷ்யம் படம் பெற்றுள்ளது. இந்த தகவலை மிகுந்த சந்தோஷத்துடனும் பெருமையுடனும் தயாரிப்பாளர் ஆன்டனி பெரும்பாவூர், ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

    முதல் மலையாள படம்

    முதல் மலையாள படம்

    அவர் தனது பதிவில், ஜகார்த்தாவை சேர்ந்த PT Falcon என்ற கம்பெனி த்ரிஷ்யம் படத்தை இந்தோனேஷிய மொழியில் ரீமேக் செய்யும் உரிமத்தை பெற்றுள்ளது. இந்தோஷிய மொழியில் ரீமேக் ஆகும் முதல் மலையாள படம் த்ரிஷ்யம் தான் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். த்ரிஷ்யம் ஏற்கனவே 4 இந்திய மொழிகளிலும், 2 வெளிநாட்டு மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. சீன மொழியில் ரீமேக் செய்யப்பட்ட முதல் மலையாள படமும் த்ரிஷ்யம் தான்.

    தேசங்களை கடந்த சாதனை

    தேசங்களை கடந்த சாதனை

    மோகன்லால் சார் நடித்த இந்த படத்தை எனது நெருங்கிய நண்பர் ஜீத்து ஜோசப் இயக்கி இருந்தார். மொழிகள், தேசங்களை கடந்து த்ரிஷ்யம் சாதனை படைத்து வருகிறது. இந்த தகவலை பெருமையுடனும், மகிழ்ச்சியுடனும் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார் ஆன்டனி பெரும்பாவூர். த்ரிஷ்யம் 2 படமும் பல மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது.

    நான்காவதாக இணைந்த கூட்டணி

    நான்காவதாக இணைந்த கூட்டணி

    தற்போது ஜீத்து ஜோசப், மோகன்லால் கூட்டணி நான்காவது முறையாக இணைந்துள்ளது. 12 th Man என பெயரிடப்பட்டுள்ள இந்த படமும் த்ரில்லர் படமாகவே உருவாக்கப்பட்டு வருகிறது. இந்த படத்தை முடித்த பிறகு டைரக்டர் ஜீத்து ஜோசப், த்ரிஷ்யம் 2 படத்தின் தமிழ் ரீமேக்கான கமல் நடிக்கும் பாபநாசம் 2 படத்தை இயக்க உள்ளதாக கூறப்படுகிறது.

    English summary
    Producer Anthony Perumbavoor has shared on social media that We are happy to announce that Drishyam is the first Malayalam film to be remade in Indonesian. Drishyam has already been remade in 4 Indian languages ​​and 2 foreign languages. He has also said that Drishyam is the first Malayalam film to be remade in Chinese.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X