ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும் இப்படி ஒருவர் இருக்கிறார்...மோகன்லால் பரபர டிவீட்!

சென்னை : மோகன் லால் நடிப்பில் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் பிரமாண்ட வெற்றியடைந்த படம் திரிஷ்யம். இப்படத்தின் இரண்டாம் பாகம் OTT-யில் வெளியாகி சக்கைப்போடு போட்டு வருகிறது.

மோகன்லால், மீனா நடிப்பில் உருவான இப்படத்தில், கொலையை மறைத்து அந்த கொலை வழக்கில் இருந்து குடும்பத்தை தந்திரமாக காப்பாற்றி அந்த வழக்கில் இருந்து வெளிவருவார். பல ட்விஸ்டுகளுடன் ரசிகர்களை விழிப்பிதுங்க வைத்த திரிஷ்யம் வெளியாகி மெகா ஹிட்டடித்தது.

இப்படம் தமிழில் கமலஹாசன் மற்றும் கௌதமியின் நடிப்பில் பாபநாசம் என்ற பெயரில் வெளியாகி வெற்றியும் பெற்றது. மேலும் த்ரிஷ்யம்2ம் பாகத்திலும் கமலை நடிக்க வைக்க பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றனர். இதுகுறித்து அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 வெங்கடேஷ்

வெங்கடேஷ்

அதே போல திரிஷ்யம்2ம் பாகத்தின் தெலுங்கு ரீமேக் தொடங்கப்பட்டுள்ளது. முதல் பாகத்தில் தெலுங்கு நடிகர் வெங்கடேஷ் நடித்திருந்தார். தற்போது இரண்டாம் பாகம் தெலுங்கு ரீமேக்கிலும் அவர் நடித்து வருகிறார். தெலுங்கிலும் முதல்பாகம் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

 மீண்டும் விசாரணை

மீண்டும் விசாரணை

6 ஆண்டுகள் கழித்து வருண் கொலை வழக்கை மீண்டும் போலீஸ் விசாரிக்க தொடங்குகின்றனர். அதற்காக இரண்டு வருடம் யாருக்கும் தெரியாமல் மோகன்லால் குடும்பத்தை நோட்டமிட்டு இந்த கொலையை நிருபிக்க முயற்சிகள் நடக்கின்றன.அதை தந்திரமாக மோகன்லால் முறியடித்து விடுகிறார்.

 நிதானமான நடிப்பு

நிதானமான நடிப்பு

மோகன்லால் ஜார்ஜ்குட்டி கதாபாத்திரத்தில் நடித்தார் என்பதை விட அந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்தார் என்றுதான் சொல்லவேண்டும். கடைசி வரை முகத்தில் எந்த ஒரு டென்ஷனையும், எமோஷ்னல் எதையும் காட்டாமல் நிதானமாக நடித்து அசத்தி உள்ளார் மோகன் லால்.

 ஆச்சரியத்துக்காக காத்து இருங்கள்

ஆச்சரியத்துக்காக காத்து இருங்கள்

இந்நிலையில்இப்படம் குறித்து மோகன்லால் பதிவிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும் ஜார்ஜ்குட்டி போன்ற நபர் இருக்கிறார். உங்கள் ஹீரோவுடன் உங்கள் படத்தை பகிர்ந்து ஆச்சரியத்துக்காக காத்து இருங்கள் என்று பதிவிட்டுள்ளார். திரிஷ்யம்2 ஒடிடியில் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X