twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    தீவிரமாகும் போதைப் பொருள் விவகாரம்.. மேலும் ஓர் இளம் நடிகர் திடீர் கைது.. திரையுலகில் பரப்பரப்பு!

    By
    |

    பெங்களூரு: போதைப் பொருள் விவகாரத்தில் மேலும் ஒரு இளம் நடிகர் கைது செய்யப்பட்டுள்ளார்.

    இது சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த விவகாரத்தில் மேலும் சிலர் கைது செய்யப்படுவார்கள் என்று கூறப்படுகிறது.

    கன்னட சினிமா துறையில் போதைப்பொருள் விவகாரம் விஸ்வரூபம் எடுத்து வருகிறது.
    சஞ்சனா
    ராகிணி திவேதி

    இதுதொடர்பாக நாள்தோறும் புதிய புதிய தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்த வழக்கு தொடர்பாக நடிகைகள் ராகிணி திவேதி, சஞ்சனா கல்ராணி ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். இவர்கள் உள்பட 14 பேர் மீது போதைப்பொருள் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

     பாண்ட் படங்களுக்கு டேனியல்கிரேக் டாட்டா.. இவர்தான் அடுத்த ஜேம்ஸ்பாண்ட்..இதுவாவது உண்மையா இருக்குமா? பாண்ட் படங்களுக்கு டேனியல்கிரேக் டாட்டா.. இவர்தான் அடுத்த ஜேம்ஸ்பாண்ட்..இதுவாவது உண்மையா இருக்குமா?

    ராகிணி திவேதி

    ராகிணி திவேதி

    இதுதொடர்பாக நாள்தோறும் புதிய புதிய தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்த வழக்கு தொடர்பாக நடிகைகள் ராகிணி திவேதி, சஞ்சனா கல்ராணி ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். இவர்கள் உள்பட 14 பேர் மீது போதைப்பொருள் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

    ஆண்ட்ரிதா ராய்

    ஆண்ட்ரிதா ராய்

    இந்நிலையில் கன்னட நடிகை ஆண்ட்ரிதா ராய், அவர் கணவர் திகாந்த் ஆகியோருக்கும் மத்திய குற்றப்பிரிவு போலீசார் சம்மன் அனுப்பினர். பின்னர் அவர்கள் விசாரிக்கப்பட்டனர். தாங்கள் பார்ட்டிகளில் கலந்துகொண்டது உண்மை என்றும் போதைப் பொருள் பயன்படுத்தியது இல்லை என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

    தள்ளி வைப்பு

    தள்ளி வைப்பு

    இந்நிலையில் நடிகை ராகிணி திவேதியும் சஞ்சனா கல்ராணியும் பார்ப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இருவரும் ஒரே அறையில் அடைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இவர்களுக்கான ஜாமீன் மனு மீதான விசாரணை நேற்று வந்தது. இந்த விசாரணை மீண்டும் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

    போதைப் பொருள்

    போதைப் பொருள்

    மேலும் பல சினிமா பிரபலங்களிடம் விசாரிக்க சம்மன் அனுப்பப்படும் என்று கூறப்படுகிறது . இந்நிலையில், மங்களூருவில் தடைசெய்யப்பட்ட எம்.டி.எம்.ஏ. போதைப்பொருளை வைத்திருந்ததாக 2 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.1 லட்சம் மதிப்பிலான போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டன.

    கிஷோர் ஷெட்டி

    கிஷோர் ஷெட்டி

    விசாரணையில், அவர்கள் கிஷோர் அமன் ஷெட்டி (30), அகீல் நவ்ஷல் (28) என்பது தெரியவந்தது. கிஷோர் நடன கலைஞரும், இந்தி நடிகரும் ஆவார். அவர், இந்தியில் பிரபுதேவா நடிப்பில் வெளியான ஏ.பி.சி.டி படத்தில் நடித்துள்ளார். இந்தப் படம் தமிழிலும் ரிலீஸ் ஆனது.
    மேலும் பெங்களூருவில் தனியார் கன்னட தொலைக்காட்சி நடத்திய நடன போட்டி நிகழ்ச்சியிலும் பங்கேற்றுள்ளார்.

    நடிகர்-நடிகைகள்

    நடிகர்-நடிகைகள்

    இவர் மும்பையில் இருந்து போதைப் பொருட்களை கடத்தி வந்து பெங்களூரு, மங்களூரு உள்ளிட்ட பகுதிகளில் நடக்கும் பார்ட்டிகளுக்கு சப்ளை செய்து வந்ததும் தெரியவந்தது. போதைப் பொருட்கள் விற்கும் கும்பலுடன் தொடர்புடைய அவர், பெங்களூருவில் கன்னட நடிகர்-நடிகைகள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் பங்கேற்கும் பார்ட்டிகளுக்கும் இதை விற்று வந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

    கன்னட சினிமா

    கன்னட சினிமா

    அவர்களை கைது செய்துள்ள குற்றப்பிரிவு போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர். போதைப் பொருள் விவகாரம் தொடர்பாக மேலும் ஒரு நடிகர் கைது செய்யப்பட்டிருப்பது கன்னட சினிமா துறையில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. சில நடிகர், நடிகைகள் பீதியில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

    English summary
    Kishore Shetty, a participant in the popular dance show 'Dance India Dance' and was also part of film, 'ABCD: Any Body Can Dance'. He was arrested for carrying drugs.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X