கூண்டோட கைலாசம் தான் போல.. தீபிகா படுகோனேவை தொடர்ந்து இன்னொரு பிரபல நடிகையும் சிக்குகிறார்?
மும்பை: போதைப் பொருள் விவகாரம் தொடர்பாக ஏகப்பட்ட முன்னணி பாலிவுட் நடிகர்கள் பெயர்கள் அடிபட்டு வருகிறது.
சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் மரண வழக்கை விசாரணையில் நடிகை ரியா சக்கரவர்த்தி போதைப் பொருள் பயன்படுத்தியது தெரியவந்து கைது செய்யப்பட்டார்.
நடிகை தீபிகா படுகோனேவின் பெயரும் போதைப் பொருள் விவகாரத்தில் அடிபட்டுள்ள நிலையில், அடுத்ததாக மற்றொரு பிரபல நடிகையின் பெயரும் அடிபட்டு வருகிறது.

நடிகைகளாகவே
போதைப் பொருள் விவகாரத்தில் பிரபல நடிகர்கள் பெயர்கள் சிக்காமல், வெறும் நடிகைகள் பெயர்களாகவே சிக்கி வருவது குறிப்பிடத்தக்கது. நடிகை ரியா சக்கரவர்த்தி கைது செய்யப்பட்ட நிலையில், நடிகைகள் சாரா அலி கான், ரகுல் ப்ரீத் சிங் மற்றும் ஷ்ரத்தா கபூர் உள்ளிட்ட பெயர்கள் அடிபட்டு வருகின்றன. ரகுல் ப்ரீத் சிங் தனது பெயர் அடிபட்டதற்கு எதிராக வழக்கு தொடர்ந்தது குறிப்பிடத்தக்கது.

பாரில் விசாரிப்பு
சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணத்தைத் தொடர்ந்து தினமும் ஹாஷ்டேக் டிரெண்ட் செய்து வரும் அவரது ரசிகர்கள், பாலிவுட் நடிகர்கள் தீபிகா படுகோனே, அர்ஜுன் கபூர், ஷாகித் கபூர் என ஏகப்பட்ட பிரபலங்கள் போதைப் பொருள் பயன்படுத்தியதாக பார்ட்டி செய்த வீடியோ ஒன்றை ஷேர் செய்தனர். தற்போது அந்த பார்ட்டி நடத்தப்பட்ட பாரில் விசாரணையை போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் முடுக்கி விட்டுள்ளனர்.

தீபிகா படுகோனே
பாலிவுட்டின் முன்னணி நடிகை தீபிகா படுகோனே, தனது மேனேஜர் கரிஷ்மா பிரகாஷிடம் போதைப் பொருள் கேட்டு வாட்ஸப் மெசேஜ் செய்ததாக தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும், தீபிகாவின் மேனேஜருக்கு NCB அதிகாரிகள் சம்மன் அனுப்பி இருப்பது பாலிவுட்டில் பரபரப்பை கிளப்பி இருக்கிறது.

இன்னொரு நடிகை
நடிகை தீபிகா படுகோனேவை தொடர்ந்து மற்றொரு பாலிவுட் நடிகையான தியா மிர்சாவின் பெயரும் இந்த போதைப் பொருள் விவகார வழக்கில் அடிபட்டு வருகிறது. இதனால், ஒட்டுமொத்த பாலிவுட்டும் யாருக்கும் யாரும் சப்போர்ட் செய்து கொள்ளாமல் மெளனமாக இருந்து வருகின்றனர்.

விரைவில் விசாரணை
பாலிவுட் நடிகர்களுக்கு போதைப் பொருளை விற்பனை செய்ததாக அன்குஷ் மற்றும் அனுஜ் என்பவர்கள் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் அளித்த வாக்குமூலத்தின் பேரில் நடிகை தியா மிர்ஸாவின் மேனேஜருக்கு விரைவில் சம்மன் வரும் என்றும், அதனைத் தொடர்ந்து தியா மிர்சாவுக்கும் சம்மன் அனுப்பப்படும் என்றும் கூறப்படுகிறது.

தியா மறுப்பு
தனது பெயர் போதைப் பொருள் விவகாரத்தில் அடிபட்டுள்ள நிலையில், நடிகை தியா மிர்ஸா உடனடியாக அதனை மறுத்துள்ளார். இது முற்றிலும் திட்டமிட்டு, தனது வளர்ச்சியை கெடுக்கும் நோக்கில் பரபரப்பட்டு வரும் பொய்யான செய்தி என்றும், தான் ஒரு போதும் போதைப் பொருள் தொடர்பான விஷயங்களை பயன்படுத்தியதே இல்லை என்றும் சட்டப்படி இந்த பிரச்சனையை எப்படி சமாளிப்பது என்பது குறித்து ஆலோசித்து வருகிறேன் என ட்வீட் போட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











