போதைப் பொருள் விவகாரம்.. லாக்கப்பில் சஞ்சனா - ராகிணி திவேதி திடீர் மோதல்.. ஏற்கனவே ஆகாதாமே!
பெங்களூரு: போதைப் பொருள் விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ள நடிகைகள் சஞ்சனா கல்ராணியும் ராகிணி திவேதியும் மோதிக் கொண்ட தகவல் வெளியாகி உள்ளது.
பெங்களூருவில் போதை மாத்திரைகளை விற்பனை செய்த டிவி நடிகை அனிகா உள்பட 3 பேர் கடந்த மாதம் 21 ஆம் தேதி கைது செய்யப்பட்டனர்.
அனிகாவிடம் நடத்திய விசாரணையில், அவருக்கு கன்னட சினிமா நடிகர், நடிகைகளுடன் தொடர்பு இருப்பது தெரியவந்தது.

இந்திரஜித் லங்கேஷ்
திரையுலகினர் நடத்தும் பார்ட்டிகளின் போது அனிகா போதை மாத்திரைகளை விற்று வந்துள்ளார். இந்நிலையில், கன்னட சினிமாவில் நடக்கும் பார்ட்டிகளின் போது போதைப் பொருட்கள் பயன்பாடு இருப்பதாக கன்னட இயக்குனர் இந்திரஜித் லங்கேஷ் பரபரப்பு புகார் கூறியிருந்தார். இளம் நடிகர், நடிகைகள் அதைப் பயன்படுத்துவதாகக் கூறிய அவர் அதைப் பயன்படுத்தும் 15 நடிகர், நடிகைகளின் பெயர் பட்டியலையும் ஒப்படைத்தார்.

ராகிணி திவேதி
இந்த விவகாரத்தில் ரவிசங்கர் என்ற அரசு ஊழியர் கைது செய்யப்பட்டார். இவர் ஜெயநகர் ஆர்.டி.ஓ அலுவலகத்தில் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார். இவரிடம் நடத்திய விசாரணையில் நடிகை ராகிணி திவேதியுடன் நெருங்கிய தொடர்பில் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவர் வீட்டில் சோதனை செய்த போலீசார் கடந்த 4 ஆம் தேதி அவரை கைது செய்தனர்.

சஞ்சனா கல்ராணி
அவரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வந்தது. இந்நிலையில் கன்னட நடிகையும் நடிகை நிக்கி கல்ராணியின் சகோதரியுமான சஞ்சனா கல்ராணியின் நண்பர், ராகுல் என்பவரும் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டார். அவரும் சஞ்சனா கல்ராணி உள்பட போதைப் பொருள் பயன்படுத்தும் நடிகர், நடிகைகளின் விவரங்களை தெரிவித்துள்ளார்.

தனித்தனியாக
பின்னர் இந்த விவகாரத்தில் தொடர்பு இருப்பதாக நடிகை சஞ்சனா கல்ராணியும் கைது செய்யப்பட்டார். அவரை 5 நாட்கள் காவலில் எடுத்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். நடிகைகள் 2 பேரிடமும் மத்திய குற்றப்பிரிவு போலீசார் தனித்தனியாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

போலீசார் சமாதானம்
கைது செய்யப்பட்டுள்ள நடிகைகள் ராகிணி திவேதிக்கும் சஞ்சனா கல்ராணிக்கும் ஏற்கனவே பிரச்னை. இந்நிலையில் லாக்கப்பில், இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. லைட்டை அணைப்பது தொடர்பாக தகராறு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இவர்கள் போட்ட சண்டையை அடுத்து பெண் போலீசார் சமாதானம் செய்ய முற்பட்டதாகவும் அவர்களையும் இருவரும் மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications