போதைப் பொருள் விவகாரம்.. தீபிகா படுகோனே, ரகுல் ப்ரீத் சிங், சாரா அலி கான், ஷ்ரத்தா கபூருக்கு சம்மன்
மும்பை: பிரபல பாலிவுட் நடிகைகளான தீபிகா படுகோனே, ரகுல் ப்ரீத் சிங், சாரா அலி கான் மற்றும் ஷ்ரத்தா கபூர் ஆகிய நான்கு பேருக்கு போதைப் பொருள் தடுப்புப் பிரிவு போலீசார் சம்மன் அனுப்பி உள்ளனர்.
நடிகை தீபிகா படுகோனேவின் மேனேஜருக்கு சம்மன் அனுப்பப்பட்ட நிலையில், தற்போது தீபிகா படுகோனே உள்ளிட்ட 4 பிரபல நடிகைகளுக்கு சம்மன் அனுப்பப்பட்டு இருப்பது பாலிவுட்டில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சுஷாந்த் சிங் மரணம்
பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் கடந்த ஜூன் மாதம் 14ம் தேதி பாந்த்ராவில் உள்ள தனது வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட நிலையில், கண்டெடுக்கப்பட்டார். சுஷாந்த் சிங் ராஜ்புத் மரண விவகாரத்தில் மும்பை போலீசார் உண்மையை மறைப்பதாக எழுந்த புகாரை தொடர்ந்து சிபிஐ விசாரணை நடந்து வருகிறது.

சிக்கிய காதலி
சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் பணத்தை கொள்ளையடித்ததாக சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் தந்தை தொடர்ந்த வழக்கில் விசாரணைக்கு அழைக்கப்பட்ட நடிகை ரியா சக்கரவர்த்தி, போதைப் பொருள் வாங்கிய விவகாரத்தில் கையும் களவுமாக சிக்கி உள்ளார். கைது செய்யப்பட்ட அவர் நீதிமன்ற காவலில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

சுஷாந்த் மீது விழுந்த பழி
நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் மரணத்திற்கு நீதி கிடைக்க வேண்டும் என்று தொடங்கிய போராட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ள நடிகை ரியா சக்கரவர்த்தி, நடிகர் சுஷாந்த் சிங்கிற்காகத் தான் போதைப் பொருள் வாங்கினேன் என மொத்த பழியையும் அவர் மீது தற்போது சுமத்தி உள்ளார். மேலும், பாலிவுட்டில் பல நடிகர்களுக்கும் போதைப் பொருள் விவகாரத்தில் தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது.

மாட்டிவிட்ட வாட்ஸப்
நடிகை ரியா சக்கரவர்த்தி, சாரா அலி கான் மற்றும் ரகுல் ப்ரீத் சிங் பெயர்களை வெளியிட்டார் என்ற தகவல் பரவி வைரலானது. தற்போது நடிகை தீபிகா படுகோனே அவரது மேனேஜர் கரிஷ்மாவுக்கு போதைப் பொருள் கேட்டு அனுப்பப்பட்ட வாட்ஸப் மெசேஜ் சிக்கி உள்ளது என்றும், அதன் காரணமாக அவரை விசாரிக்க சம்மன் அனுப்பி உள்ளது NCB.

4 நடிகைகள்
நடிகை தீபிகா படுகோனே, ரகுல் ப்ரீத் சிங், சாரா அலி கான், ஷ்ரத்தா கபூர் மற்றும் ஃபேஷன் டிசைனர் சைமன் கம்பட்டா உள்ளிட்ட 5 பேருக்கு தற்போது போதைப் பொருள் தடுப்புப் பிரிவு சம்மன் அனுப்பி உள்ள தகவல்கள் வெளியாகி உள்ளன. விரைவில் இவர்களிடம் நடத்தப்படும் விசாரணையில், பல உண்மைகள் தெரிய வரும் என்றும் தெரிகிறது.
Recommended Video

சிக்குவார்களா
நடிகை கங்கனா ரனாவத், பாலிவுட்டில் ரன்வீர் சிங், ரன்பீர் கபூர், அர்ஜுன் கபூர் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுக்கும் போதைப் பொருள் விவகாரத்தில் தொடர்பு உள்ளதாக மறைமுகமாக குற்றம்சாட்டி இருந்தார். தீபிகா படுகோனேவின் கணவர் ரன்வீர் சிங் உள்ளிட்ட முன்னணி நடிகர்களும் இந்த விவகாரத்தில் சிக்குவார்களா? பாலிவுட் சினிமா உலகின் எதிர்காலம் என்ன ஆகும் என்ற பல கேள்விகளுக்கு என்ன விடை கிடைக்கப் போகிறது என்பதை காண ஒட்டுமொத்த திரையுலகமும் இந்த விவகாரத்தை உற்று நோக்கி வருகிறது.


Click it and Unblock the Notifications











