போதைப் பொருள் விவகாரம்.. சிக்குகிறாரா தீபிகா படுகோனே? மேனேஜருக்கு சம்மன் அனுப்பியதால் பரபரப்பு!
மும்பை: போதைப் பொருள் தடுப்புப் பிரிவான NCB நடிகை தீபிகா படுகோனேவின் மேனேஜருக்கு சம்மன் அனுப்பி இருப்பது பாலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
சுஷாந்த் சிங் ராஜ்புத் மரண வழக்கு, தற்போது பாலிவுட்டில் புழங்கி வரும் போதைப் பொருள் விவகார வழக்காக மாறி வருகிறது.
நடிகை ரியா சக்கரவர்த்தி கைதை தொடர்ந்து, தற்போது போதைப் பொருள் விவகாரத்தில் முன்னணி நடிகை தீபிகா படுகோனே பெயர் அடிபட்டு வருகிறது.

சிக்க வைத்த வாட்சப்
கடந்த 2017ல் K என்ற நபரிடம் D என்ற பிரபலம் ‘மால்' (போதைப் பொருள்) இருக்கிறதா என்ற கேட்ட வாட்சப் மெசேஜால் தற்போது முன்னணி நடிகையான தீபிகா படுகோனேவின் பெயர் போதைப் பொருள் விவகாரத்தில் அடிபட்டு வருகிறது. K என்ற நபர் தீபிகா படுகோனேவின் மேனேஜர் கரிஷ்மா பிரகாஷ் என தெரியவந்திருப்பது பாலிவுட்டில் பரபரப்பை கிளப்பி இருக்கிறது.

விசாரணைக்கு
இந்த தகவல் உறுதி செய்யப்பட்டு உள்ளதாகவும், நடிகை தீபிகா படுகோனேவின் மேனேஜர் கரிஷ்மா பிரகாஷ் மற்றும் டேலன்ட் மேனேஜ்மென்ட் ஏஜெண்ட் சி.இ.ஓ துருவ் சித்கோபேக்கர் உள்ளிட்ட இருவருக்கும் இந்த விவகாரத்தில் தொடர்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ள நிலையில், இருவரையும் விசாரணை செய்ய NCB சம்மன் அனுப்பி உள்ளது.

கங்கனா குற்றச்சாட்டு
இந்த விவகாரம் குறித்த தகவல்கள் வெளியானதும் ட்விட்டரில் தீபிகா படுகோனே பெயர் டிரெண்ட் ஆகி வருகிறது. பாலிவுட் ரசிகர்கள், நீங்களுமா? என கேள்வி எழுப்பி தீபிகா படுகோனேவை கழுவி ஊற்றி வருகின்றனர். நடிகை கங்கனா ரனாவத், இதுபோன்ற போதைப் பொருட்களை உட்கொண்டால் மன அழுத்தம் தான் ஏற்படும் என நடிகை தீபிகாவை கிண்டல் செய்து ட்வீட் ஒன்றும் போட்டுள்ளார்.

தீபிகா சிக்குவாரா
போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் தீபிகா படுகோனேவின் மேனேஜரை விசாரிக்கும் பட்சத்தில் நடிகை தீபிகா படுகோனேவும் நடிகை ரியா சக்கரவர்த்தியை போல கைது செய்யப்படுவார் என பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. நடிகை தீபிகா படுகோனே இந்த விவகாரம் குறித்து என்ன சொல்வார் என்பதை அறியவும் ரசிகர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
Recommended Video

ஏற்கனவே
முன்னதாக நடிகை ரியா சக்கரவர்த்தி, போதைப் பொருள் பயன்படுத்திய நடிகைகள் என ரகுல் ப்ரீத் சிங் மற்றும் சாரா அலி கான் பெயர்களை வெளியிட்டார் என்ற ஒரு தகவல் வெளியானது. ஆனால், NCB அதனை மறுத்த நிலையில், நடிகை ரகுல் ப்ரீத் சிங் வழக்கு தொடர்ந்ததும் குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











