ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது.. விவேக் ஓபராயின் உறவினருக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ்

பெங்களூரு: போதைப் பொருள் விவகாரம் தொடர்பாக பிரபல பாலிவுட் நடிகர் விவேக் ஓபராயின் உறவினர் ஆதித்ய ஆல்வாவிற்கு லுக் அவுட் நோட்டீஸ் விடப்பட்டு இருக்கிறது.

கன்னட திரையுலகில் போதைப் பொருள் விவகாரம் விஸ்வரூபம் எடுத்து இருக்கிறது.

நடிகைகள் ராகிணி திவேதி மற்றும் சஞ்சனா கல்ரானி உள்பட 15 பேர் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சூடுபிடிக்கும் வழக்கு

சூடுபிடிக்கும் வழக்கு

பாலிவுட் முதல் சாண்டல்வுட் வரை சினிமா துறையில் புழங்கும் போதைப் பொருள் விவகாரம் விஸ்வரூபம் எடுத்து வருகிறது. ஏகப்பட்ட பிரபலங்களின் பெயர்கள் அடிபட்டு வருகின்றன. கன்னட திரையுலகையே இந்த போதைப் பொருள் வழக்கு கலங்கடித்து வருகிறது. மத்திய குற்றப்பிரிவு அதிகாரிகளும், போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகளும் கர்நாடகாவில் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.

தலைமறைவு

தலைமறைவு

ஜனதா தள கட்சியின் துணைத் தலைவர் பதவியில் இருந்த மறைந்த கர்நாடக அமைச்சர் ஜீவராஜ் ஆல்வாவின் மகனும் பிரபல பாலிவுட் நடிகர் விவேக் ஓபராயின் மைத்துனரும் ஆன ஆதித்யா அல்வா, இந்த போதைப் பொருள் வழக்கில் 6வது குற்றவாளியாக அடையாளம் காணப்பட்டுள்ளார். போதைப் பொருள் விவகாரத்தில் போலீசாரின் விசாரணைக்கு ஒத்துழைக்காமல் தலைமறைவாகி உள்ளார் ஆதித்யா.

ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது

ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது

போதைப் பொருள் விவகாரத்தில் இருந்து தப்பிக்க வெளிநாடுகளுக்கு செல்ல முடியாத வகையில் ஆதித்யா ஆல்வாவுக்கு எதிராக மத்திய குற்றப்பிரிவு போலீசார் (CCB) லுக் அவுட் நோட்டீஸ் கொடுத்துள்ளது. போதைப் பொருள் விவகாரத்தில் முதல் குற்றவாளியாக கருதப்படும் தயாரிப்பாளர் சிவ பிரகாசுக்கு எதிராகவும் இந்த லுக் அவுட் நோட்டீஸ் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

நடிகைகளுக்கு பெயில் கிடைக்குமா

நடிகைகளுக்கு பெயில் கிடைக்குமா

இந்த வழக்கில் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ள நடிகைகள் சஞ்சனா கல்ரானி மற்றும் ராகிணி திவேதிக்கு பெயில் வழங்க வேண்டும் என தொடரப்பட்ட வழக்கு வரும் செப்டம்பர் 24ம் தேதி விசாரணைக்கு வருகிறது. இருவரும் தற்போது நீதிமன்ற காவலில் பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Recommended Video

போதைப்பொருள் விவகாரத்தில் சிறை சென்ற நடிகைகள்.. பெண் காவலரிடம் சிகரெட் கேட்டு தகராறு
பதற்றத்தில் திரையுலகம்

பதற்றத்தில் திரையுலகம்

ஏற்கனவே கன்னட திரையுலகில் 15 பிரபலங்களின் பெயர்கள் போதைப் பொருள் விவகாரத்தில் சிக்கி உள்ள நிலையில், அவர்களுக்கு போதைப் பொருள் சப்ளை செய்ததாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களின் வாக்குமூலம் வெளியாகும் பட்சத்தில் இன்னும் எத்தனை பிரபலங்கள் இந்த வலையில் சிக்குவார்கள் என்ற பதற்றத்தில் சாண்டல்வுட் சிக்கித் தவிக்கிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X