'அந்த' வீடியோவை வெளியிட நான் என்ன முட்டாளா?: பிரபல இயக்குநர்

By Siva

மும்பை: பாலிவுட் பிரபலங்களுக்கு போதை பார்ட்டி கொடுத்தேனா என்று இயக்குநரும், தயாரிப்பாளருமான கரண் ஜோஹார் கேள்வி எழுப்பியுள்ளார்.

பிரபல பாலிவுட் இயக்குநரும், தயாரிப்பாளருமான கரண் ஜோஹார் பிரபலங்களுக்கு பார்ட்டி கொடுத்தார். கரண் ஜோஹார் பார்ட்டி கொடுப்பது எல்லாம் சகஜம் தான். அந்த பார்ட்டியில் நடிகைகள் தீபிகா படுகோனே, மலாய்கா அரோரா, நடிகர்கள் ரன்பிர் கபூர், ஷாஹித் கபூர், விக்கி கவுஷல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Drug party: Karan Johar gives explanation

பார்ட்டியில் எடுத்த வீடியோவை கரண் சமூக வலைதளத்தில் வெளியிட்டார். அந்த வீடியோவை பார்த்த சிரோமணி அகாலிதள எம்.எல்.ஏ. மஜிந்தர் சிங் சிர்சா பாலிவுட் பிரபலங்கள் மது அல்ல போதைப்பொருள் பயன்படுத்தியதாக குற்றம் சாட்டினார். மேலும் போதைப்பொருள் உட்கொள்ளவில்லை என்றால் அதை நிரூபிக்க மருத்துவ பரிசோதனை செய்யத் தயாரா என்று அவர் கேள்வி எழுப்பினார்.

பார்ட்டியில் போதைப் பொருள் பயன்படுத்தப்பட்டதற்கு கரண் வெளியிட்ட வீடியோ தான் சாட்சி என்றார். இந்நிலையில் இது குறித்து கரண் ஜோஹார் விளக்கம் அளித்துள்ளார். பார்ட்டி குறித்து கரண் கூறியதாவது,

நாங்கள் போதைப்பொருள் பயன்படுத்தியிருந்தால் அதை ஏன் நான் வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் வெளியிடப் போகிறேன்?. வாரம் முழுக்க கடினமாக உழைத்த நாங்கள் அன்று இரவு ரிலாக்ஸ் செய்தோம். ஏதாவது நடந்ததை வீடியோ எடுத்து வெளியிட நான் ஒன்றும் முட்டாள் இல்லை என்றார்.

நடிகர் விக்கி கவுஷல் அருகே இருந்த வெள்ளை நிறப் பவுடர் பற்றி கேட்டதற்கு கரண் கூறியதாவது, அது விளக்கின் வெளிச்சம். அதை போய் பவுடர் என்று நினைக்கலாமா என்று கேட்டார்.

கரண் ஜோஹார் அளித்த விளக்கம் ஏற்பது போன்று இல்லையே, விளக்கின் வெளிச்சத்திற்கும், வெள்ளை நிற பவுடருக்கும் மக்களுக்கு வித்தியாசம் தெரியாது என்று நினைக்கிறாரா என விமர்சனம் எழுந்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X