வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த கஞ்சா.. நடிகை சோனியா அகர்வால் திடீர் கைது.. பரபரப்பு!

பெங்களூரு: நடிகை சோனியா அகர்வால் வீட்டில் போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் சோதனை நடத்திய நிலையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Recommended Video

என் மீது கஞ்சா கேஸா? ' Actress Sonia Agarwal Interview | Tamil Filmibeat

கன்னட சினிமாவில் போதை பொருள் புழக்கம் இருப்பது கடந்த சில மாதங்களாக வெளிச்சத்திற்கு வருகிறது. இதில் பிரபலங்கள் பலர் சிக்கி வருகின்றனர்.

கடந்த 12ஆம் தேதி நைஜீரிய நாட்டைச் சேர்ந்த போதைப்பொருள் விற்பனையாளர் தாமஸ் காலுவை கோவிந்த்புரா போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 1.50 லட்சம் மதிப்புள்ள 403 x டெக் மாத்திரைகளை போலீசார் கைப்பற்றினர்.

பிரபலங்களுக்கு போதை பொருள் சப்ளை

பிரபலங்களுக்கு போதை பொருள் சப்ளை

அவர் இந்த எக்ஸ்-பிசி மாத்திரைகளை கல்லூரி மாணவர்கள் மற்றும் தொழில் அதிபர்களுக்கு சப்ளை செய்வது தெரியவந்தது. மேலும் சினிமா பிரபலங்கள் பலருக்கும் விலையுயர்ந்த கோகோயின் செயற்கை மருந்துகள் விற்பனை செய்யப்பட்டதும் தெரிய வந்தது. ஒரு கிராம் கோகோயின் ரூ .15,000 க்கு விற்கப்பட்டதாக கூறப்படுகிறது.

அதிரடி சோதனை நடத்திய போலீஸ்

அதிரடி சோதனை நடத்திய போலீஸ்

இந்நிலையில் போதைப்பொருள் விற்பனையாளர் தாமஸ் காலுவுடன் தொடர்பு வைத்திருந்த பல்வேறு பிரபலங்கள் மற்றும் வணிகர்களின் வீடுகளில் போலீசார் சோதனை நடத்தினர். ராஜாஜிநகர், பத்மநாபநகர் மற்றும் பென்சன் டவுனில் உள்ள டிஜே வச்சோன் சின்னப்பா, தொழிலதிபர் பரத் மற்றும் பிரபல நடிகை சோனியா அகர்வால் ஆகியோரின் வீடுகளில் போலீசார் சோதனை நடத்தினர்.

சோனியா அகர்வால் வீட்டில் கஞ்சா பதுக்கல்

சோனியா அகர்வால் வீட்டில் கஞ்சா பதுக்கல்

கோவிந்த்புரா காவல் நிலையத்தில் கைதி தாமஸ் காலு அளித்த தகவலின் படி, சோதனைகள் தெரியவந்துள்ளது. சோதனையின் அடிப்படையில் ரியல் எஸ்டேட் அதிபர் பரத் போலீஸ் காவலில் எடுத்து விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டார். அழகுசாதனத் தொழிலில் ஈடுபட்டுள்ள 40 வயதான கன்னட நடிகை சோனியா அகர்வால், வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 40 கிராம் கஞ்சா கண்டுபிடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

கன்னட நடிகை சோனியா அகர்வார் கைது

கன்னட நடிகை சோனியா அகர்வார் கைது

இதனை தொடர்ந்து கன்னட நடிகை சோனியா அகர்வால் கைது செய்யப்பட்டுள்ளார். போதை பொருட்களை பதுக்கி வைத்திருந்த புகாரில் பிரபல நடிகை கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர் யாருக்கெல்லாம் போதை பொருட்களை சப்ளை செய்தார், யாரிடமிருந்து பெற்றார் என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.

சுஷாந் சிங் மரணத்தை தொடர்ந்து

சுஷாந் சிங் மரணத்தை தொடர்ந்து

பிரபல பாலிவுட் நடிகரான சுஷாந்த் சிங் ராஜ்புத் கடந்த ஆண்டு மும்பை பாந்த்ரா வீட்டில் தூக்கில் தொங்கியப்படி சடலமாக கண்டெடுக்கப்பட்டார். இதுதொடர்பாக கைது செய்யப்பட்ட சுஷாந்தின் காதலி ரியா சக்கரவர்த்தி சுஷாந்த் போதை வஸ்துகளுக்கு அடிமையாக இருந்ததாக குற்றம்சாட்டினார்.

கன்னட சினிமாவில் போதை பொருள்

கன்னட சினிமாவில் போதை பொருள்

இதனை தொடர்ந்து பாலிவுட்டில் நிலவிய ட்ரக்ஸ் பார்ட்டி குறித்து விசாரித்தனர் போலீசார். இதில் ரியா சக்கரவர்த்தி, அவரது சகோதரர் உட்பட பலர் சிக்கினர். ரகுல் பிரீத் சிங் உள்ளிட்ட பல பிரபலங்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. இதனை தொடர்ந்து கன்னட சினிமா பிரபலங்கள் மத்தியிலும் போதை பொருள் பழக்கம் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது.

கன்னட திரையுலகில் பரபரப்பு

கன்னட திரையுலகில் பரபரப்பு


போதைப் பொருள் வழக்கில் கடந்த ஆண்டு நடிகைகள் ராகிணி, சஞ்சனா ஆகியோர் சிக்கினர். அவர்கள் கைது செய்யப்பட்டு பல மாதம் சிறையில் அடைக்கப்பட்டனர். தற்போது மீண்டும் நடிகை ஒருவர் போதை பொருள் சோதனையில் சிக்கி கைது செய்யப்பட்டிருப்பது கன்னட திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X