போதைபொருள் வழக்கு.. கைது செய்யப்பட்டுள்ள பிரபல நடிகை டாக்டருடன் ரகசிய திருமணம்? வைரலாகும் போட்டோ!

By

பெங்களூரு: போதைப் பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள பிரபல நடிகை, டாக்டரை ரகசிய திருமணம் செய்துகொண்டதாகக் கூறப்படுகிறது.

பெங்களூருவில் போதை மாத்திரைகளை விற்பனை செய்த டிவி நடிகை அனிகா உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

அனிகாவிடம் நடத்திய விசாரணையில், அவருக்கு கன்னட சினிமா நடிகர், நடிகைகளுடன் தொடர்பு இருப்பது தெரியவந்தது.

இந்திரஜித் லங்கேஷ்

இந்திரஜித் லங்கேஷ்

இதையடுத்து கன்னட இயக்குனர் இந்திரஜித் லங்கேஷ் பரபரப்பு புகார் கூறியிருந்தார். இளம் நடிகர், நடிகைகள் அதைப் பயன்படுத்துவதாகக் கூறிய அவர் அதைப் பயன்படுத்தும் 15 நடிகர், நடிகைகளின் பெயர் பட்டியலையும் மத்திய குற்றப்பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தார். இந்த விவகாரத்தில் ரவிசங்கர் என்ற அரசு ஊழியர் கைது செய்யப்பட்டார்.

ராகிணி திவேதி

ராகிணி திவேதி

இவரிடம் நடத்திய விசாரணையில், நடிகை ராகிணி திவேதியுடன் நெருங்கிய தொடர்பில் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவர் வீட்டில் சோதனை செய்த போலீசார் அவரை கைது செய்தனர். பின்னர் நடிகை சஞ்சனா கல்ராணியையும் போலீசார் கைது செய்தனர். போலீஸ் காவலில் உள்ள இருவரிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சஞ்சனா கல்ராணி

சஞ்சனா கல்ராணி

இந்நிலையில், நடிகை சஞ்சனா கல்ராணி, டாக்டர் ஒருவரை திருமணம் செய்ததாக சமூக வலைத்தளங்களில் போட்டோ ஒன்று வைரலானது. போலீசார் சோதனை நடத்த வரும் முன், நடிகை சஞ்சனா கல்ராணியின் வீட்டில் இருந்து ஒருவர் வெளியே சென்றதாக தகவல் வெளியானது. அவர் டாக்டர் அஜீஸ் பாஷா என்று தெரியவந்துள்ளது.

திருமணம் ஆகவில்லை

திருமணம் ஆகவில்லை

சஞ்சனா கல்ராணியும், அஜீஸ் பாஷாவும் திருமணம் செய்து கொண்டு ஒரே வீட்டில் கடந்த ஒரு வருடமாக வசித்து வந்ததாகவும் தகவல்கள் வெளியானது. ஆனால் இதை நடிகை சஞ்சனா கல்ராணி மறுத்துள்ளார். தனக்கு திருமணம் ஆகவில்லை என்று கடந்த சில நாட்களுக்கு முன் கூறியிருந்தார்.

வெளிநாட்டில் திருமணம்

வெளிநாட்டில் திருமணம்

இந்த நிலையில் நடிகை சஞ்சனா கல்ராணி, டாக்டர் அஜீஸ் பாஷா திருமண கோலத்தில் இருக்கும் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. சஞ்சனா கல்ராணியும், அஜீஸ் பாஷாவும் வெளிநாட்டில் வைத்து திருமணம் செய்து கொண்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

Recommended Video

கவர்ச்சிக்கு இங்கே இடமில்லை | DIRECTOR KV KATHIRVELU|RAJAVAMSAM |FILMIBEAT TAMIL
நிச்சயதார்த்தம் நடந்தது

நிச்சயதார்த்தம் நடந்தது

இதுபற்றி நடிகை சஞ்சனாவின் அம்மா ரேஷ்மா கல்ராணி கூறும்போது, சஞ்சனா கல்ராணிக்கு டாக்டர் அஜீஸ் பாஷாவுடன் கடந்த மூன்றரை வருடங்களுக்கு முன் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. ஏப்ரல் மாதம் திருமணம் செய்துகொள்ள இருந்தனர். கொரோனா வைரஸ் காரணமாகத் திருமணத்தை தள்ளி வைக்க வேண்டிய சூழல் ஏற்பட்டு விட்டது என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X