பரபரக்கும் போதைப் பொருள் விவகாரம்.. எஸ்கேப் ஆன நடிகை ராகிணி.. அதிரடியாக கெடு விதித்த போலீஸ்!
பெங்களூரு: போதைப் பொருள் விவகாரத்தில் நடிகை ராகிணி திவிவேதிக்கு மத்திய குற்றப்பிரிவு போலீசார் கெடு விதித்துள்ளனர்.
Recommended Video
பெங்களூருவில் தடை செய்யப்பட்ட எம்.டி.எம்.ஏ., எல்.எஸ்.டி. போதை மாத்திரைகளை விற்பனை செய்த 3 பேரை போலீசார் கடந்த சில நாட்களுக்கு முன் கைது செய்தனர்.
அவர்கள், கன்னட டிவி நடிகை அனிகா, கேரளாவைச் சேர்ந்த ரவீந்திரன், அனூப் ஆகியோர் என்பது தெரியவந்தது.

நடிகர், நடிகைகள்
அவர்களிடம் இருந்து ஏராளமான போதை மாத்திரைகளை, பறிமுதல் செய்தனர். கைதான டிவி நடிகை அனிகாவிடம் நடத்திய விசாரணையில், அவருக்கு கன்னட சினிமா நடிகர், நடிகைகளுடன் தொடர்பு இருப்பதும் திரையுலகினர் நடத்தும் பார்ட்டிகளின் போது அனிகா போதை மாத்திரைகளை விற்று வந்ததும் தெரியவந்தது.

இந்திரஜித் லங்கேஷ்
இந்நிலையில், கன்னட சினிமாவில் நடக்கும் பார்ட்டிகளின் போது போதை பொருட்கள் பயன்பாடு இருப்பதாகவும், இளம் நடிகர், நடிகைகள் அதைப் பயன்படுத்துவதாகவும் கன்னட பட இயக்குனர் இந்திரஜித் லங்கேஷ், சில நாட்களுக்கு முன் புகார் கூறியிருந்தார். அவர் போதைப் பொருள் பயன்படுத்தும் 15 நடிகர், நடிகைகளின் பெயர் பட்டியலையும் போலீசாரிடம் கொடுத்தார்.

ராகிணியுடன் நெருக்கம்
இந்நிலையில் இந்த விவகாரத்தில் ரவிசங்கர் என்ற அரசு ஊழியர் கைது செய்யப்பட்டார். இவர் ஜெயநகர் ஆர்.டி.ஓ அலுவலகத்தில் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார். இவரிடம் நடத்திய விசாரணையில் நடிகை ராகிணியுடன் இவர் நெருக்கமாக இருந்துள்ளது தெரியவந்தது. இதையடுத்து இந்த வழக்கில், நேற்று ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு ராகிணி திவிவேதிக்கு மத்திய குற்றப்பிரிவு போலீசார் சம்மன் அனுப்பினர்.

திங்கட்கிழமை
ஆனால் அவர் ஆஜராகவில்லை. 'விசாரணைக்கு ஆஜராக முடியவில்லை. எனது வழக்கறிஞர் போலீசாரை சந்தித்து விளக்கம் அளித்துள்ளார். திங்கட்கிழமை ஆஜராவேன்' என்று ராகிணி சமூக வலைதளத்தில் கூறி இருந்தார். மற்றொரு பதிவில், 'போதைப்பொருள் விவகாரத்தில் போலீசார் கேட்கும் கேள்விகளுக்குப் பதில் அளிப்பேன். தலைமறைவாகவில்லை. எனக்கும் போதைப்பொருள் விவகாரத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை என்று கூறியுள்ளார்.

விசாரணைக்கு ஆஜர்
ஆனால் நடிகை ராகிணி திவிவேதி விசாரணைக்கு ஆஜராக கால அவகாசம் கேட்டு இருப்பதை மத்திய குற்றப்பிரிவு போலீசார் நிராகரித்துள்ளனர். இன்று கண்டிப்பாக ஆஜராக வேண்டும் என்றும் இல்லை என்றால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவருக்கு உத்தரவிட்டுள்ளனர். இதனால் நடிகை ராகிணி திவிவேதி இன்று விசாரணைக்கு ஆஜராவார் என்று கூறப்படுகிறது. நடிகை ராகிணி தமிழில் நிமிர்ந்து நில் படத்தில் ஜெயம் ரவி ஜோடியாக நடித்திருந்தார்.


Click it and Unblock the Notifications











