Don't Miss!
- News "ஒழுங்கா சொத்தை பிரிச்சு கொடு.." தந்தையை மிக கொடூரமாக தாக்கிய மகன்.. பதைபதைக்க வைக்கும் சம்பவம்
- Automobiles டிவிஎஸ் அப்பாச்சி பைக்குகள் ஓரங்கட்ட படுகிறதா? சேல்ஸ் குறைஞ்சிக்கிட்டே வருது... பஜாஜ் ஹாப்பி!!
- Sports வாழ்க்கைன்னா ஒரு சில அடிகள் விழத்தான் செய்யும்.. எல்லா போட்டியிலும் வெல்ல முடியாது.. பாட் கம்மின்ஸ்
- Lifestyle 100 ஆண்டுகளுக்கு பின் உருவாகியுள்ள திரிகிரக யோகம்: அடுத்த 5 நாட்கள் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்..
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
சின்னபிள்ளைல பார்த்தத அப்படியே காட்டியிருக்காங்க.. சார்பட்ட பரம்பரையை புகழ்ந்து தள்ளிய பிரபலம்!
சென்னை: சார்பட்டா பரம்பரை படத்தை பிரபல இசைக் கலைஞரான ட்ரம்ஸ் சிவமணி புகழ்ந்து தள்ளியுள்ளார்.
Recommended Video
பா ரஞ்சித் இயக்கத்தில் உருவான சார்பட்டா பரம்பரை படம் கடந்த 21ஆம் தேதி இரவு ஓடிடி தளமான அமேஸான் பிரைம்மில் வெளியானது.
இந்தப் படத்தில் நடிகர் ஆர்யா, துஷாரா விஜயன், பசுபதி, கலையரசன், ஜான் விஜய், ஜான் கோக்கென், சஞ்சனா நடராஜன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.
சார்பட்டா பரம்பரை முக்கியமான திரைப்படம்… பாராட்டிய உதயநிதி ஸ்டாலின் !
தொய்வே இல்லை
1970களில் வட சென்னையில் பிரபலமாக இருந்த குத்துச்சண்டையை மையப்படுத்தி இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. கிட்டதட்ட 3 மணி நேரம் உள்ள போதும் படம் கடைசி வரை கொஞ்சமும் தொய்வை ஏற்படுத்தவில்லை.
பழைய நார்த் மெட்ராஸ்
படத்தை பார்த்த பலரும் பாராட்டு மழை பொழிந்து வருகின்றனர். படத்தில் நடித்த ஒவ்வொரு கேரக்டருமே தங்களின் எதார்த்தமான நடிப்பால் கவர்ந்துள்ளனர். 1970களில் உள்ள வட சென்னையை அப்படியே கண் முன் கொண்டுவந்துள்ளது படக்குழு.
அற்புதமான படம்
இந்நிலையில் சார்பட்டா பரம்பரை படத்தை பார்த்த பிரபல இசை கலைஞரான ட்ரம்ஸ் சிவமணி புகழ்ந்து தள்ளியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் பேசியிருப்பதாவது, சார்பட்டா பரம்பரை படம் அற்புதமான படம்.
கோல்டன் டேஸ்க்கு போயிட்டேன்
நான் என்னுடைய பழைய நினைவுகள் மற்றும் என்னுடைய கோல்டன் டேஸ்க்கு சென்றுவிட்டேன். என்னுடைய அப்பா, கண்ணப்பன் திடல், சால்ட் கோட்டை, நட்ராஜ் தியேட்டர், நேரு ஸ்டேடியம் உள்ளிட்ட இடங்களில் நடைபெற்ற டோர்னமெண்டுகளுக்கு அழைத்து சென்றுள்ளார்.
முகமதலி வந்தபோது..
பாப்புலரான பாக்ஸர்கள் அனைவரையும் எனக்கு தெரியும். முகமதலி வந்த போது எம்ஜிஆர் சார் அந்த டோரனமெண்டுக்கு நேரடியாக வந்தார். நான் அங்குதான் இருந்தேன் எனக்கு நன்றாக ஞாபகம் இருக்கிறது.
ஒவ்வொரு ஃபிரேமும் ஆஸம்
படத்தில் வட சென்னையை காட்டியுள்ளார்கள். என்னுடைய ஏரியா, வியாசர்பாடி. மூலக்கொத்தடம், பேசின் பிரிட்ஜ், வால்டெக்ஸ் ரோடு என அனைத்தையும் காட்டியுள்ளார்கள். அந்த பகுதியில் உள்ள ஸ்லாங் உட்பட படத்தில் உள்ள ஒவ்வொரு ஃபிரேமும் ஆஸம். நான் எல்லாவற்றையும் என்ஜாய் பண்ணினேன்.
மொத்த டீம்மும்
இயக்குநர் ரஞ்சித், இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன், நம்ம அடியெல்லாம் காட்டியிருக்கீங்க.. அழகான பேக் கிரவுண்ட் ஸ்கோர்.. மற்றும் ஆர்யா உட்பட மொத்த டீமுக்கும் என்னுடைய வாழ்த்துகள்.. சிறந்த படம்.. இவ்வாறு ட்ரம்ஸ் சிவமணி தனது வீடியோவில் பேசியுள்ளார். இந்த வீடியோவை நடிகர் ஆர்யா தனது இன்ஸ்டா பக்கத்தில் ஷேர் செய்துள்ளார.