Drums Shivamani: டிரம்ஸ் சிவமணி மகனுக்கு டும் டும் டும்.. ரிஷப்ஷனில் அட்டனன்ஸ் போட்ட பிரபலங்கள்!
சென்னை: தமிழ் சினிமாவில் நீண்ட காலமாக உள்ள பிரபலங்களின் வாரிசுகளுக்கு திருமணங்கள் அடுத்தடுத்து நடைபெற்று வருகிறது. கடந்த மாதம் தயாரிப்பாளர் வேல்ஸ் நிறுவன, ஐசரி கணேஷ் மகளுக்கு திருமணம் நடைபெற்றது. இந்த வாரத்தில் இன்று நடிகர் கிங்காங்கின் மகள் திருமணம் நடைபெற்று முடிந்தது. அதேபோல் ஏற்கனவே இசையமைப்பாளர் டிரம்ஸ் சிவமணியின் மகன் குமரனுக்கு திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் அவரது மகன் திருமண விழாவில் பல திரைப் பிரபலங்கள் அரசியல் தலைவர்கள் கலந்து கொண்டார்கள்.
இசையமைப்பாளர் டிரம்ஸ் சிவமணி தமிழ் இசை துறையில் மட்டும் இல்லாமல், மொத்த இந்திய இசை துறையில் கவனிக்கப்படும் ஆளுமையாக உள்ளார். இசைப்புயல் ஏ.ஆர். ரகுமானின் இசைக்குழுவில் பல ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் இவரது மகன் குமரனுக்கும் அவரது காதலி ஹர்ஷனாவுக்கும் சில தினங்களுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் இவரது திருமண வரவேற்பு நிகழ்ச்சி மிகவும் கோலாகலமாக நடைபெற்றது.

இந்த வரவேற்பு நிகழ்ச்சியில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான், இயக்குநர் பாக்யராஜ், இயக்குநர் டி. ராஜேந்திரன், பாடகி மற்றும் நடிகர் விஜய்யின் தாயார் ஷோபனா, நகைச்சுவை நடிகர் செந்தில், மூத்த நடிகை நளினி, பாடகர் ஷங்கர் மகாதேவன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்த வரவேற்பு நிகழ்ச்சி தனியார் நட்சத்திர ஓட்டலில் மிகவும் கோலாகலமாகவும் பிரமாண்டமாகவும் நடைபெற்றது.
புகைப்படங்கள்: சில தினங்களுக்கு முன்னர் நடைபெற்ற திருமணத்திலும் திரைப் பிரபலங்கள் பலர் கலந்து கொண்டனர். குறிப்பாக இசையமைப்பாளர் தேவா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். மகனுக்கு திருமணம் நடந்து முடிந்த சந்தோஷத்தில் இசையமைப்பாளர் டிரம்ஸ் சிவமணி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.

இன்ஸ்டாவில் குஷி: இது மட்டும் இல்லாமல், மகனுக்கு திருமணம் முடிந்ததும், குடும்பத்தோடு திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சென்று தரிசனமும் செய்துள்ளனர். இது தொடர்பான வீடியோவையும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் டிரம்ஸ் சிவமணி. இவர் பகிர்ந்த புகைப்படங்கள் மற்றும் விடியோவுக்கு ரசிகர்களும் இணையவாசிகளும் லைக்குகளை வாரி வழங்கி வருகிறார்கள். இது மட்டும் இல்லாமல், திருமணம் செய்து கொண்ட காதல் தம்பதிகளுக்கும் வாழ்த்துகளை தெரிவித்து வருகிறார்கள்.


Click it and Unblock the Notifications











