Drums Sivamani: 40 நிமிஷம் லேட்.. விமான நிலையத்தில் திடீரென டிரம்ஸ் சிவமணி செய்த காரியம்!

கொச்சி: சமீப காலமாக விமான நிலையங்களில் காலதாமதம் என்கிற பிரச்சனை அதிகளவில் எழுந்து வருகிறது. பேருந்து, ரயில்கள் எல்லாம் கூட்ட நெரிசலாக எப்போதோ மாறிவிட்ட நிலையில், தற்போது விமான நிலையங்களிலும் பயணிகள் அலைமோதி வருகின்றனர். ராதிகா ஆப்தேவை 3 மணி நேரம் சமீபத்தில் விமான நிலையம் ஒன்றில் அடைத்து வைத்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், 40 நிமிட கால தாமதத்தை பயன்படுத்தி டிரம்ஸ் சிவமணி செய்த வேலை ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தி உள்ளது.

ஏ.ஆர். ரஹ்மான் இசையில் பல பாடல்களுக்கு டிரம்ஸ் வாசித்து பிரபலமானவர் தான் டிரம்ஸ் சிவமணி. 64 வயதாகும் இவர் தனியாக பல ஆல்பம் பாடல்களையும் உருவாக்கி உள்ளார். சர்வதேச விழாக்களிலும் கச்சேரி வாசித்து வருகிறார்.

Drums Sivamani creates sudden concert for co passengers due to this reason

ரோஜா முதல் ராக்ஸ்டார் வரை: ஏ.ஆர். ரஹ்மான் இசையில் வெளியான பல தமிழ் படங்களில் இடம்பெற்ற சூப்பர் ஹிட் பாடல்களுக்கு தனது டிரம்ஸ் இசையை வழங்கி ரசிகர்களை இசையால் உருவ வைத்தவர் டிரம்ஸ் சிவமணி. காதல் ரோஜாவே, தக்க தையா தையா, ரங் தே பசந்தி பட பாடல்கள், லகான் மற்றும் ராக்ஸ்டார் என ஏ.ஆர். ரஹ்மான் இசையில் வெளியான இந்தியாவின் பல சூப்பர் ஹிட் படங்களில் இடம்பெற்ற பாடல்களுக்கு இவர் டிரம்ஸ் வாசித்துள்ளார்.

40 நிமிட தாமதம்: கொச்சி விமான நிலையத்தில் பயணிகள் வந்து இறங்கியும் அவர்களது லக்கேஜ் வருவதற்கு 40 நிமிடங்கள் தாமதம் ஆகும் என அறிவிக்கப்பட்ட உடன் சக பயணி ஒருவர் திடீரென அங்கே இருந்த மெட்டாலிக் கன்வேயர் பெல்ட்டையே டிரம்ஸ் ஆக பயன்படுத்தி இசை கச்சேரி நடத்தி எங்களை எல்லாம் மகிழ்ச்சியில் ஆழ்த்தினார் என சக பயணி ஒருவர் ட்விட்டரில் பதிவிட்ட வீடியோ தற்போது வெளியாகி வருகிறது.

டிரம்ஸ் சிவமணி கச்சேரி: 12 மணி நேரம் லேட்டானாலும் கொடுத்து வச்சிருக்கணும் என அந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள். அது வேறு யாருமில்லை. நம்ம டிரம்ஸ் சிவமணி தான். அவர் இசைக்கச்சேரி இப்படி இலவசமாக அருகே பார்க்க கிடைத்ததற்கே கொடுத்து வைத்திருக்க வேண்டும் என அந்த பயணிக்கு பலரும் கமெண்ட் போட்டு வருகின்றனர்.

டிரெண்டாகும் வீடியோ: மணிரத்னம் இயக்கத்தில் அரவிந்த் சாமி நடித்த பம்பாய் படத்தில் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்த "அந்த அரபிக் கடலோரம்" பாடலில் இடம்பெறும் "ஹம்ம ஹம்ம ஹம்மா" பாடல் எப்போதும் டிரம்ஸ் சிவமணியின் ஆல் டைம் ஃபேவரைட். அதைத்தான் விமான நிலையத்தில் கிடைத்ததை வைத்து வாசித்து பயணிகளை 40 நிமிடங்கள் போர் அடிக்காமல் செய்திருக்கிறார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X