விபத்தில் படுத்த படுக்கையான அப்பா.. பாதியில் நின்ற படிப்பு.. டிரம்ஸ் சிவமணியின் மறுபக்கம்!
சென்னை: Drums Sivamani (டிரம்ஸ் சிவமணி) டிரம்ஸ் வாசிப்பில் பல சாதனைகளை படைத்துள்ள டிரம்ஸ் சிவமணி, எம்.எஸ்.வி, காலத்திலிருந்து பல முன்னணி இசையமைப்பாளர்களிடம் பணியாற்றி உள்ளார்.
நவீன இசையமைப்பாளரான டிரம்ஸ் சிவமணி தற்போது பல படங்களுக்கும், கோவில் நிகழ்ச்சிகளில் பல மணி நேரம் விடாது இசை கச்சேரி நடத்தி வருகிறார்.

பிரபல இணையதளம் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ள டிரம்ஸ் சிவமணி தனது வாழ்க்கையில் கடந்து வந்த பாதை குறித்து விளக்கமாக கூறியுள்ளார்.
டிரம்ஸ் சிவமணி: அதில், அப்பா விபத்தில் சிக்கி படுத்த படுக்கையாகி விட்டதால், அவருக்கு பதிலாகத்தான் நான் டிரம்ஸ் வாசிக்க சென்றேன் என்றாலும், இந்த இசை லயத்தை எனக்கு கொடுத்தது கடவுள் தான். அம்மாவின் வயிற்றுக்குள் ஒன்பது மாதங்கள் நான் இருக்கும் போதே, இசையை கேட்டுக்கொண்டுதான் இருந்தேன்.

இசையின் மீது ஆர்வம்: அப்பா இசை கலைஞர் என்பதால், நான் பிறந்ததும் எனக்கு அப்பா இசையை சொல்லி கொடுத்தார், படிப்பை விட எனக்கு இசையின் மீது தான் அதிக ஆர்வம் இருந்தது. எங்க வீடு பேசின் பிரிட்ஜ் பக்கத்தில் இருந்தது, அங்கு சுடுகாடு இருந்ததால், தினமும் வரும் சாவு மேளத்தை எப்படி வாசிக்கிறார்கள் என்று பார்த்துக்கொண்டே இருப்பேன், அதே போல ரயில் சத்தத்தையும் நான் ரசித்துக் கேட்பேன்.
அப்பா விபத்தில் சிக்கினார்: அப்படி வீட்டில் டிரம்ஸ் வாசிக்கும் போது பார்த்து இருக்கிறேன்.ஆனால் அப்பா போய் படி படி என்றுதான் சொல்லிகொண்டே இருப்பார். ஒருநாள் அப்பா வீட்டில் இல்லாத போது டிரம்ஸ் வாசித்துக்கொண்டு இருந்தேன் இதைப்பார்த்த பின்பு தான் என் அப்பாவுக்கு எனக்கு இசையின் மீது இருக்கும் ஆர்வம் தெரியவந்தது. அதன் பிறகு தான் அப்பா டிரம்ஸ் வாசிக்க கற்றுக்கொடுத்தார். பின் நாளில் இதுதான், குடும்பத்தை காப்பாற்ற உதவியது என்றார். அதன்பிறகு பாதியிலே படிப்பு நின்றுவிட்டது.

கருப்பு கண்ணாடி: மேலும், அப்பா இறந்த போது, மொட்டை போட சொன்னார்கள் அப்போது பல நிகழ்ச்சி இருந்ததால் தொப்பி போட்டுக்கொண்டு போனேன். இதைப்பார்த்த என் வெளிநாட்டு நண்பர் இந்த துணியை வாங்கி அனுப்பினார். அதே போல இந்த கருப்பு கண்ணாடி அணிய காரணம் எம்ஜிஆர் மற்றும் கலைஞர் கருணாநிதி இவர்கள் இருவரும் எங்கே இருந்தாலும் தனியாக தெரிவார்கள் என்பதால், அந்த கண்ணாடி மீது எனக்கு ஒரு ஆசை இதனால், இதை என் ஐடன்ட்டிடியாக மாற்றிவிட்டேன் என்றார்.


Click it and Unblock the Notifications











