காயத்ரி குடிபோதையில் அட்டகாசம் செய்தாரா?: காரில் இருந்த 'பிக் பாஸ்' காஜல் சாட்சியம்
Recommended Video

சென்னை: காயத்ரி ரகுராம் குடிபோதையில் கார் ஓட்டியதாக வெளியான செய்தியை பார்த்துவிட்டு அவருடன் இருந்த காஜல் பசுபதி விளக்கம் அளித்துள்ளார்.
நடிகை காயத்ரி ரகுராம் குடிபோதையில் கார் ஓட்டி போலீசில் சிக்கியதாக செய்திகள் வெளியானது. அவர் போதையில் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும் கூறப்பட்டது.
இந்த சம்பவம் நடந்தபோது காயத்ரியுடன் காரில் இருந்தவர் பிக் பாஸ் பிரபலம் காஜல் பசுபதி.
காஜல்
மீடியா அடிக்கடி என்னையே குறி வைக்கிறது. ஏன் என்று தெரியவில்லை என காயத்ரி ரகுராம் ட்வீட்டியதை பார்த்த காஜல், நான் தானே கூட இருந்தேன். என்ன இது புதுக் கதை. இஷ்டத்திற்கும் அடிச்சி விடுறாங்களே. ஃப்ரீயா விடுங்க. கவலைப்படாதீங்க என்று ஆறுதல் கூறியுள்ளார்.

வீடு
ஷூட்டிங் முடித்துவிட்டு சக கலைஞர் ஒருவரை வீட்டில் விடச் சென்றபோது வழக்கமான சோதனைக்காக போலீசார் தனது காரை நிறுத்தியதாக காயத்ரி ரகுராம் தெரிவித்துள்ளார். அந்த கலைஞர் யார் என்று அவர் கூறாத நிலையில் காஜல் தாமாக வந்து சாட்சியம் அளித்துள்ளார்.
மது
காஜல் காயத்ரிக்கு ஆதரவாக ட்வீட்டியதை பார்த்த ஒருவர் அப்போ நீங்க தான் குடித்தீர்களா என்று கேட்டார். அதற்கு அவர் இல்லை, ஷூட்டிங் முடிந்து போய்க் கொண்டிருந்தோம். அவருக்கு உடம்புக்கு சரியில்லை என்றார்.

பொய் செய்தி
குடிபோதையில் போலீசிடம் சிக்கிய ஒரு பிரஸ் ரிப்போர்டர் தன்னை பற்றி பொய் செய்தி வெளியிட்டுள்ளதாக காயத்ரி தெரிவித்துள்ளார். அப்படி என்றால் போலீசார் ரூ. 3 ஆயிரத்து 500 அபராதம் விதித்தது பொய்யா என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.


Click it and Unblock the Notifications











