குடிபோதையில் கார் ஓட்டி விபத்தை ஏற்படுத்தினேனா?: விஜய் டிவி புகழ் சுனிதா விளக்கம்
Recommended Video

சென்னை: தனக்கு மது அருந்தும் பழக்கமே இல்லாதபோது குடிபோதையில் எப்படி கார் ஓட்ட முடியும் என்று விஜய் டிவி பிரபலம் சுனிதா கேள்வி எழுப்பியுள்ளார்.
அஸ்ஸாம் மாநிலத்தை சேர்ந்தவர் சுனிதா கோகாய். அவர் விஜய் டிவியின் ஜோடி நம்பர் ஒன் நிகழ்ச்சி மூலம் பிரபலமானார். இந்நிலையில் அவர் குடிபோதையில் கார் ஓட்டி விபத்தை ஏற்படுத்தியதாகக் கூறி வீடியோ ஒன்று வைரலானது.
இது குறித்து அவர் செய்தி இணையதளம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது,

குடிபோதை
விபத்து நடந்தபோது நான் குடிபோதையில் இல்லை. நான் காரை ஓட்டவும் இல்லை. சொல்லப் போனால் எனக்கு கார் ஓட்டவே தெரியாது, ஓட்டுநர் உரிமம் கூட இல்லை. என் காருக்கு டிரைவர் உள்ளார். அவர் குடித்துவிட்டு ஓட்டக் கூடாது என்பதில் கவனமாக உள்ளேன்.

வாகனங்கள்
வேலூரில் விபத்து நடந்த போது நான் பின் இருக்கையில் இருந்தேன். காரை விட்டு இறங்கி வந்து பார்க்கும் வரை விபத்தின் தீவிரம் எனக்கு தெரியாது. இரண்டு வாகனங்களுமே பாதிக்கப்பட்டது.

டிரைவர்
இது என் கார் டிரைவரின் தவறு என்பதை ஒப்புக் கொள்கிறேன். அனைத்து இடங்களிலும் விபத்துகள் நடக்கிறது. அதனால் யாரையும் குறை சொல்ல முடியாது. நான் காரில் இருந்து இறங்கியபோது மக்கள் என்னை திட்டினார்கள். எனக்கு தமிழ் சரியாக தெரியாது என்பதால் நான் பதில் பேசவில்லை. நான் பதில் பேசாததால் நான் குடிபோதையில் இருந்ததாக தவறாக நினைத்துக் கொண்டனர்.

சேதம்
நான் விளக்கம் அளிக்க நினைத்தும் பயனில்லை. மற்றொரு காரில் இருந்தவருக்கு காயம் இல்லை. அப்படி இருக்கும்போது ஏன் என் மீது பழிபோடுகிறார்கள் என்று புரியவில்லை என்றார் சுனிதா.


Click it and Unblock the Notifications











