twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    குடிபோதையில் கார் ஓட்டி போலீசாருடன் மோதினேனா?: காயத்ரி ரகுராம் விளக்கம்

    By Siva
    |

    Recommended Video

    குடிபோதையில் காரை ஓட்டிபோலீசிடம் வாக்குவாதம் செய்த காயத்ரி ரகுராம்?

    சென்னை: குடிபோதையில் கார் ஓட்டி போலீசாரிடம் சிக்கியதாக வெளியான தகவல் குறித்து காயத்ரி ரகுராம் விளக்கம் அளித்துள்ளார்.

    நடிகையும், டான்ஸ் மாஸ்டருமான காயத்ரி ரகுராம் குடிபோதையில் சென்னையில் கண்டபடி கார் ஓட்டி போலீசாரிடம் சிக்கியதாக தகவல் வெளியானது. இது குறித்து அறிந்த அவர் ட்விட்டரில் விளக்கம் அளித்துள்ளார்.

    காயத்ரி ரகுராம் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,

    ரிப்போர்டர்

    இந்த போலி செய்தியை உருவாக்கியது குடித்துவிட்டு கார் ஓட்டி சிக்கிய பிரஸ் ரிப்போர்டர். நான் ஷூட்டிங் முடித்துவிட்டு என் சக கலைஞரை வீட்டில் விடச் சென்றேன். வழக்கமான பரிசோதனைக்காக என் காரை நிறுத்தினார்கள். நான் போலீசாருடன் மோதவில்லை. அந்த ரிப்போர்டர் தனக்கு தோன்றியது அனைத்தையும் எழுதியுள்ளார்.

    போலீஸ்

    ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட ஆவணங்கள் வேறு பையில் இருந்தது. அதனால் அந்த ஆவணங்களை சரி பார்க்க போக்குவரத்து போலீஸ்காரர் என்னுடன் வந்தார். அவர்களின் பணியை பாராட்டுகிறேன். சண்டை எதுவும் இல்லை. அவர் என் தந்தை பற்றி பேசினார், அவர் என் ரசிகர் அதனால் நாங்கள் சேர்ந்து செல்ஃபி எடுத்துக் கொண்டோம். நான் காரை ஓட்டினேன்.

    கார்

    நான் குடிபோதையில் இருந்திருந்தால் அவர்கள் மீண்டும் என்னை காரை ஓட்டவிட்டிருக்க மாட்டார்கள். அதனால் தேவையில்லாத கதைகளை எழுதுவதை நிறுத்தவும் என்று தெரிவித்துள்ளார் காயத்ரி ரகுராம்.

    செய்தி

    அப்படி என்றால் போலீஸ் உங்கள் காரை ஓட்டிச் சென்றதாக வெளியான செய்தி என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

    English summary
    Gayathri Raghuram tweeted that, 'The one who created this fake news he was press reporter who was caught drunk and driving. I finished my shoot and was dropping my co star at home. I was stopped for normal checking. No such incident fighting with a cop ball press reporter ended up writing whatever came in mind.'
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X