»   »  பார்ட்டியில் குடிபோதையில் நடிகையிடம் சில்மிஷம் செய்த நடிகர் கபில் சர்மா

பார்ட்டியில் குடிபோதையில் நடிகையிடம் சில்மிஷம் செய்த நடிகர் கபில் சர்மா

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: காமெடி நைட்ஸ் வித் கபில் டிவி நிகழ்ச்சியை நடத்தும் கபில் சர்மா பார்ட்டி ஒன்றில் மூக்குமுட்ட மது குடித்துவிட்டு மராத்தி நடிகை உள்பட பல பெண்களிடம் தவறாக நடந்துள்ளார்.

சர்வதேச மராத்தி திரைப்பட விருது வழங்கும் விழா அண்மையில் நடைபெற்றது. அந்த விழாவில் இந்தி மற்றும் மராத்தி நடிகர், நடிகைகள் பலர் கலந்து கொண்டனர். விழா முடிந்த பிறகு கப்பலில் பார்ட்டி நடந்தது. அந்த பார்ட்டியில் காமெடி நைட்ஸ் வித் கபில் டிவி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் கபில் சர்மா கலந்து கொண்டார்.

Kapil Sharma

அவர் ஹீரோவாக நடித்த கிஸ் கிஸ்கோ பியார் கரூன் படம் கடந்த செப்டம்பர் மாதம் ரிலீஸானது. கபில் சர்மா பார்ட்டியில் மூக்குமுட்ட மது அருந்தியுள்ளார். குடிபோதையில் அவர் மராத்தி நடிகை தீபாலி செய்யதிடம் தவறாக நடந்துள்ளார். அதன் பிறகு அவர் நடிகை கஜோலின் தங்கை தனிஷாவிடமும் சில்மிஷம் செய்துள்ளார்.

மேலும் அவர் பார்ட்டிக்கு வந்த பல பெண்களுடனும் சில்மிஷம் செய்துள்ளார். இது குறித்து தீபாலி செய்யது கூறுகையில்,

கபில் என்னுடன் டான்ஸ் ஆட வேண்டும் என்று நெருங்கி வந்தார். நான் விலகிச் சென்றேன். எனக்கு அவரை தெரியாது. தெரியாதவர்களுடன் நான் நடனம் ஆடுவது இல்லை. அவர் தனிஷா, மோனாலி தாகூருடனும் தவறாக நடந்தார் என்றார்.

English summary
Comedy nights with Kapil fame Kapil Sharma got drunk at a party and misbehaved with a Marathi actress.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil