குடிபோதையில் போலீசாரை அறைந்து, 7 வாகனங்களை சேதப்படுத்திய நடிகை

By Siva

மும்பை: நடிகை ரூஹி சிங் குடிபோதையில் போலீசாரை தாக்கியுள்ளார்.

இந்தி தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வருபவர் ரூஹி சிங்(30). ஞாயிற்றுக்கிழமை இரவு ரூஹி சிங் தனது நண்பர்கள் 4 பேருடன் பப்பிற்கு சென்று மது அருந்தியுள்ளார்.

பப்பில் இருந்து கிளம்பி காரில் வந்தபோது கழிப்பறையை பயன்படுத்துவதற்காக மும்பை பந்த்ரா பகுதியில் உள்ள மாலுக்கு சென்றுள்ளார்.

ரூஹி

ரூஹி

மால் ஊழியர்கள் ரூஹி மற்றும் அவரது நண்பர்களை கழிப்பறையை பயன்படுத்த அனுமதிக்கவில்லை. இதனால் கோபம் அடைந்த அவர்கள் மால் ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன் அவர்களை தாக்கினர். இதையடுத்து ஊழியர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

அறை

அறை

தகவல் கிடைத்ததும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். குடிபோதையில் இருந்த ரூஹி, ராகுல் சிங், ஸ்வப்னில் சிங் ஆகியோர் 2 போலீசாரை கன்னத்தில் அறைந்தனர். இதையடுத்து போலீசார் இது குறித்து வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

வாகனங்கள்

வாகனங்கள்

மாலில் இருந்து கிளம்பியபோது ரூஹி தான் காரை ஓட்டினார். அவர் சான்டாக்ரூஸ் பகுதியில் சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்கள் மீது தனது காரை மோதினார். இதில் 4 இரு சக்கர வாகனங்கள், 3 கார்கள் சேதம் அடைந்தன. நல்ல வேளையாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

ஆதாரம்

ராகுல் மற்றும் ஸ்வப்னில் போலீசாரை அறைந்தது மற்றும் மால் ஊழியர்கள் சிலரை தாக்கியது சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்தது. அந்த ஆதாரங்களின் அடிப்படையில் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

காவல் நிலையம்

காவல் நிலையம்

ரூஹிக்கு நோட்டீஸ் கொடுத்தும் அவர் விசாரணைக்காக காவல் நிலையத்திற்கு வரவில்லை. அவரின் மற்ற இரண்டு நண்பர்கள் சண்டையை தடுக்க முயன்றதால் அவர்களை போலீசார் விட்டுவிட்டனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X