போதையில் தாறுமாறாக கார் ஓட்டிய டி.வி. நடிகை.. ஸ்கூட்டரில் சென்ற பெண்கள் படுகாயம்.. கைது செய்த போலீஸ்

By

திருவனந்தபுரம்: சின்னத்திரை நடிகை போதையில், வேகமாக ஓட்டி வந்த கார் மோதி 2 பெண்கள் படுகாயம் அடைந்தனர்.

மலையாள சின்னத்திரை நடிகை, சித்திரலேகா (38). இவர் சில தொடர்களில் நடித்துள்ளார்.

இவர், நேற்று அதிகாலையில் திருவனந்தபுரம் பூழிக்குன்னு ஜங்ஷன் அருகே காரில் வந்துகொண்டிருந்தார்.

ஸ்கூட்டரில் மோதியது

ஸ்கூட்டரில் மோதியது

அவர் கார் வேகமாக வந்துகொண்டிருந்தது. இதைக் கண்டு சாலையில் சென்று கொண்டிருந்தவர்கள் ஓரமாக ஒதுங்கினர். பின்னர் வேகமாக சென்ற அந்த கார் முன்னால் சென்றுகொண்டிருந்த சில வாகனங்கள் மீது பயங்கரமாக மோதியது. இதில் ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்த இரண்டு பெண்கள் படுகாயம் அடைந்தனர். மேலும் சில கார்கள் மீதும் மோதியதால், அவை சேதமடைந்தன.

காலில் காயம்

காலில் காயம்

போலீசாருக்கு தகவல் தெரிவித்ததை அடுத்து அவர்கள் விரைந்து வந்து படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். படுகாயம் அடைந்தவர்கள் ஷ்யாமா, அர்ச்சனா என்பது தெரியவந்தது. அர்ச்சனா ஸ்கூட்டியின் பின்னால் அமர்ந்திருந்தவர். அவரது காலில் பலத்த காயம் ஏறபட்டுள்ளது.

மது போதையில்

மது போதையில்

அங்கிருந்து தப்பி முயன்ற நடிகை சந்திரலேகாவை அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் பிடித்துக் கொண்டனர். பின்னர் போலீசாரிடம் ஒப்படைத்தனர். அவரிடம் விசாரித்தபோது, மது போதையில் இருந்தது தெரியவந்தது. ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்ற போலீசார், அவரை பரிசோதனை செய்தனர். அதில் அவர் அளவுக்கு அதிகமாகக் குடித்திருந்தது தெரிந்தது. கைது செய்த போலீசார், பின்னர் ஜாமினில் விடுவித்தனர்.

உயிர்தப்பினர்

உயிர்தப்பினர்

இந்த விபத்து பற்றி கூறும்போது, சந்திரலேகா காரை வேகமாக ஓட்டி வந்தார். அவர் கார் வந்த வேகத்தைக் கண்டு மற்ற வாகன ஓட்டிகள் பீதி அடைந்தனர். ஒரு கட்டத்தில் கன்ட்ரோலை இழந்த அவர், மற்ற வாகனங்கள் மீது பயங்கரமாக மோதினார். இதில் பலர் மயிரிழையில் பலர் உயிர்தப்பினர் என நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X