சிம்பு தேவன் - விஜய் படத்துக்கு இசை தேவிஸ்ரீபிரசாத்!
சிம்பு தேவன் - விஜய் இணையும் படத்துக்கு இசையமைப்பாளராகியுள்ளார் டிஎஸ்பி எனும் தேவிஸ்ரீபிரசாத்.
அதிரடி இசையமைப்பாளரான தேவிஸ்ரீபிரசாத்தை சமீப காலமாக அதிகம் தமிழில் பார்க்க முடியவில்லை. சிங்கம் 2 படத்துக்கு இசையமைத்த பின், தெலுங்கில் பரபரப்பாகிவிட்டார்.
அத்துடன் பல மேடை நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று நடிகைகளுடன் குத்தாட்டம் போடுவது இவருக்குப் பிடித்தமான வேலை.
இந்த நிலையில் மீண்டும் சீரியஸ் மூடுக்குத் திரும்பியுள்ளார் டிஎஸ்பி.

விஜய் - சிம்புதேவன்
விஜய் தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ‘கத்தி' படத்தில் நடித்து வருகிறார். இப்படத்திற்கு பிறகு சிம்புதேவன் இயக்கத்தில் இவர் நடிப்பது உறுதியாகிவிட்ட நிலையில், இப்படத்தில் நடிக்கும் நடிகர், நடிகையர், தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வில் மும்முரமாக களமிறங்கியுள்ளார் இயக்குனர்.

ஹன்சி - ஸ்ருதி
இப்படத்தில் இரண்டு வேடங்களில் நடிக்கும் விஜய்க்கு ஸ்ருதிஹாசன் நாயகியாக நடிக்கிறார். ஹன்சிகாவும் இடம்பெறுவார் என செய்திகள் வெளியாகியுள்ளன.

ஸ்ரீதேவி
நீண்ட இடைவெளிக்கு பிறகு தமிழில் நடிகை ஸ்ரீதேவி இந்த படத்தில் நடிக்கிறார், அதுவும் விஜய்க்கு ஜோடியாக என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் வில்லனாக ‘நான் ஈ' சுதீப் நடிக்கிறார்.

தேவி ஸ்ரீ தேவி
இந்நிலையில், இப்படத்தின் இசையமைப்பாளராக தேவி ஸ்ரீ பிரசாத் தேர்வாகியுள்ளார். இவர் ஏற்கெனவே விஜய் நடித்த ‘சச்சின்' படத்திற்கு இசையமைத்துள்ளார்.

தல - தளபதி
இதுகுறித்து தேவிஸ்ரீ பிரசாத் கூறும்போது, சமீபத்தில்தான் ‘தல' அஜீத் படத்தில் இசையமைக்கும் வாய்ப்பு கிடைத்தது. தற்போது மீண்டும் தளபதி விஜய் பட வாய்ப்பு கிடைத்தது பெருமையாக இருக்கிறது. இந்த வாய்ப்பை அளித்த சிம்புதேவனுக்கும், விஜய்க்கும் நன்றி," என்றார்.


Click it and Unblock the Notifications











