ஷாருக்கானை சந்தித்து வாழ்த்து பெற்ற பிரபல பாப் பாடகி.. எதுக்கு தெரியுமா?

மும்பை: பிரபல பாப் பாடகி டுவா லிப்பா பாலிவுட்டின் முன்னணி நடிகர் ஷாருக்கானை சந்தித்து வாழ்த்து பெற்றுள்ளார்.

டுவா லிப்பாவை சந்தித்த நடிகர் ஷாருக்கான் அந்த புகைப்படங்களை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு, அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ஒன் பிளஸ் நிறுவனம் சார்பில் நடைபெறவுள்ள இசை நிகழ்ச்சிக்காகத்தான் டுவா லிப்பா இந்தியா வந்துள்ளார்.

டுவா லிப்பா

டுவா லிப்பா

இங்கிலாந்தை சேர்ந்த பிரபல டுவா லிப்பா, பாடகராகவும், பாடலாசிரியராகவும், மாடலாகவும் கலக்கி வருகிறார். 25 வயதாகும் டுவா லிப்பாவின் "Be the One" பாடல் கடந்த 2015ம் ஆண்டு வெளியாகி டுவாவின் புகழை உலகம் முழுவதும் பரப்பியது. இந்தியா உள்பட உலகில் உள்ள பல்வேறு நாடுகளில் டுவாவிற்கு ரசிகர்கள் உள்ளனர்.

ஒன் பிளஸ் இசை நிகழ்ச்சி

ஒன் பிளஸ் இசை நிகழ்ச்சி

மொபைல் மற்றும் டிவி உள்ளிட்ட மின்சாதன பொருட்களை தயாரித்து வரும் ஒன் பிளஸ் நிறுவனம் மும்பையில், மிக பிரம்மாண்டமாக இசை நிகழ்ச்சி ஒன்றை நடத்தி வருகிறது. உலகில் உள்ள பல இசை கலைஞர்கள் மற்றும் லட்சக்கணக்கான இசை பாடல்கள் அடங்கிய கண்காட்சியையும் நடத்தி வருகிறது.

ஷாருக்கான் கிண்டல்

மும்பையில் உள்ள டி.ஒய். பட்டீல் ஸ்டேடியத்தில் இன்று நடைபெற உள்ள டுவா லிப்பாவின் இசை கச்சேரிக்காக மும்பை வந்துள்ள டுவா, ஷாருக்கானை சந்தித்து வாழ்த்து பெற்றுள்ளார். டுவா லிப்பாவின் புகைப்படத்தை ட்விட்டரில் பகிர்ந்துள்ள ஷாருக்கான், அழகான, இளமையான பாடகி டுவா லிப்பாவின் இன்று இரவு கச்சேரி வெற்றிகரமாக நடைபெற தனது வாழ்த்துகள் என்று கூறியுள்ள ஷாருக்கான், மேடையில் ஆட ஸ்டெப்ஸ் தேவைப்பட்டால் தான் சொல்லித் தருவதாகவும் கிண்டலடித்துள்ளார்.

டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

ஒன் பிளஸ் நிறுவனம் நடத்தும் இந்த பிரம்மாண்ட இசை நிகழ்ச்சியின் ஆரம்ப டிக்கெட் விலை 3000 ரூபாயில் தொடங்கி 60 ஆயிரம் ரூபாய் வரைக்கு விற்பனை ஆகி வருகிறதாம். டுவா லிப்பாவிற்கு முன்பாக மற்றொரு பிரபல பாடகியான கேட்டி பெர்ரி இந்த இசை நிகழ்ச்சியில் கலந்து கொள்ள நேற்று இரவு மும்பைக்கு வந்தது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X