ரஜினி, கமல், விஜய், அஜீத், சூர்யா... இரட்டை வேடத்திற்கு மாறிய ஹீரோக்கள்

By Mayura Akilan

தமிழ் சினிமா ரசிகர்களை உற்சாகப்படுத்த இப்போது இரட்டை கதாபாத்திர கதைகளை தேர்வு செய்து வருகின்றனர் ஹீரோக்கள்.

தமிழ் சினிமாவில் பிரபல நாயகர்கள் ஏற்கனவே இரட்டை வேட கதைகளில் நடித்த திரைப்படங்கள் வெளிவந்திருந்தாலும் ஒரே நேரத்தில் ஐந்து பிரபல கதாநாயகர்கள் இரட்டை வேட கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.

ரஜினி, கமல், விஜய் அஜீத், சூர்யா என மாஸ் ஹீரோக்கள் ஐந்து பேர் இப்போது இரட்டை வேடத்தில் பிஸியாக நடித்துக்கொண்டிருக்கின்றன.

லிங்காவில் ரஜினி

லிங்காவில் ரஜினி

நீண்ட இடைவெளிக்குப் பின்னர் ரஜினிகாந்த் லிங்கா என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் கே.எஸ். ரவிக்குமார், இரட்டை வேடத்தில் ரஜினியை புதுப்பொலிவோடு படமாக்கி வருகிறாராம். அதுவும் அந்த வெட்டருவா மீசை ரஜினிக்கு சூப்பர் என்கின்றனர் ரசிகர்கள்.

சூப்பர் ஹிட் ரஜினி

சூப்பர் ஹிட் ரஜினி

ரஜினி ஏற்கனவே பல படங்களில் இரட்டை வேடங்களில், மூன்று வேடங்களில் நடித்துள்ளார். எந்திரன் படத்தில் ஹீரோ வில்லன் என ரசிகர்களுக்கு விருந்து படைத்தார். லிங்கா படத்திலும் ரசிகர்களுக்கு ஏற்ற ரஜினியாக இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இரட்டை வேடத்தில் கமல்

இரட்டை வேடத்தில் கமல்

இரட்டை வேடத்தில் கமல் நடிப்பது ஒன்றும் புதிதல்ல, எத்தனையோ படங்களில் அவர் நடித்திருந்தாலும், அபூர்வ சகோதரர்கள், இந்திரன் சந்திரன் போன்ற படங்களில் தோற்றத்தில் வித்தியாசம் காட்டியிருப்பார். தசாவதாரம் படத்தில் பத்து வேடங்களில் நடித்துள்ளார்.

உத்தமவில்லனில்

உத்தமவில்லனில்

இப்போது கமல் நடித்துக் கொண்டிருக்கும் உத்தமவில்லன் படத்தில் 19ம் நூற்றாண்டைச் சேர்ந்த தெருக்கூத்து கலைஞராகவும், இப்போதைய நடிகராகவும் நடித்து வருகிறாராம் கமல்.

கத்தியில் மிரட்டும் விஜய்

கத்தியில் மிரட்டும் விஜய்

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கும் கத்தி படத்தில் விஜய் இரட்டை வேடத்தில் நடித்து வருகிறார். இதில் கெட்டப்பில் மாற்றம் எதுவும் இருக்காதாம். ஆனால் மேனரிசத்தில் மிரட்டியுள்ளாராம் விஜய் என்கின்றனர்.

அப்பா - மகன்

அப்பா - மகன்

மேலும் சிம்புத்தேவன் இயக்கும் படத்தில் நடிகர் விஜய் அப்பா மகனாய் இரட்டை வேடத்தில் நடிக்க இருக்கிறார். ஏற்கனவே விஜய் இரட்டை வேடத்தில் நடித்த படங்கள் சரியாகப் போகவில்லை என்பதால் இதில் ஏதாவது வித்தியாசம் காட்டலாமா என்று யோசிக்கிறாராம் விஜய்.

தல 55

தல 55

கௌதம் மேனன் இயக்கத்தில் அஜீத் தன்னுடைய 55 வது படத்தில் நடித்து வருகிறார். வாலி, வில்லன் படங்களைப் போல இந்தப் படத்திலும் அஜீத் அண்ணன் தம்பி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறாராம். ஆனால் இதில் என்ன வித்தியாசம் என்பதில் ரகசியம் காக்கின்றனர் படக்குழுவினர்.

அஞ்சானில் சூர்யா

அஞ்சானில் சூர்யா

சூர்யா பெரும்பாலும் இரட்டை வேட கதைகளையே பெரிதும் தேர்வு செய்கிறார். ஒட்டிப்பிறந்த இரட்டையராய் சூர்யா நடித்த மாற்றான் சரியாகப் போகவில்லை என்பதால் அஞ்சான் படத்தில் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கிறாராம்.

இரட்டை வேட மோகம் ஏன்

இரட்டை வேட மோகம் ஏன்

முன்பெல்லாம் யாராவது ஒரு பெரிய ஹீரோதான் திரைப்படங்களில் இரட்டை வேடங்களில் நடித்து வருவார்கள். ஆனால் இப்போது ஒரே நேரத்தில் பிரபல ஹீரோக்கள் இரட்டை வேடத்தில் நடிப்பது ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. சின்னச் சின்ன ஹீரோக்கள் நடிக்கும் படமெல்லாம் வசூலில் அள்ளுவதால் பெரிய ஹீரோக்கள் மாஸ் காட்டவேண்டும் என்று நினைக்கிறார்களோ என்னவோ?

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X