»   »  பாலிவுட் வானில் பட்டையைக் கிளப்ப துபாயிலிருந்து துள்ளி வரும் கவர்ச்சி நிலா...!

பாலிவுட் வானில் பட்டையைக் கிளப்ப துபாயிலிருந்து துள்ளி வரும் கவர்ச்சி நிலா...!

By Sudha
Subscribe to Oneindia Tamil

மும்பை: சுதந்திர தினத்தை சந்தோஷமாக கொண்டாடக் காத்திருக்கிறோம். சுதேசி சுதேசி என்ற பேச்சுக்கள் நாளைக்கு காதுகளைக் கிழித்தெடுக்கும்... இந்த நிலையில் ஒரு விதேசி சினிமா நியூஸ்....

கதையின் களம் என்னவோ நம்ம ஊர் இந்தி சினிமா குறித்துத்தான்... ஆனால் அதன் மையம்தான் அன்னிய மண்.

பாலிவுட்டில் அறிமுகமாவதற்காக துபாயிலிருந்து கிளம்பி வந்துள்ளார் ரேஷ்மா டிசவுசா... படிக்கக் கஷ்டமாக இருந்தால் டிசோசா என்று ரத்தினச் சுருக்கமாக வாசித்துக் கொள்ளுங்கள்.

அவங்களைப் பற்றி ஒரு 7 ஸ்லைடில் நாலு வார்த்தை...

துபாய்க்கும்.. பாலிவுட்டுக்கும்...

துபாய்க்கும்.. பாலிவுட்டுக்கும்...

துபாய்க்கும்.. பாலிவுட்டுக்கும்... நிறையவே பொருத்தம் உண்டு. ஏன்.. துபாய் பஸ்ஸ்டாண்ட் வரை போன வகையில் நம்ம ஊர் வடிவேலு முதல் பார்த்திபன் வரை கோலிவுட்டுக்கும் கூட நிறைய தொடர்புகள் உண்டுதான்...

பாலிவுட்டின் துபாய் காதல் தனி...

பாலிவுட்டின் துபாய் காதல் தனி...

ஆனால் பாலிவுட்டின் துபாய் காதல் தனி ரகமானது. பட விழாக்கள், டிசைனர்கள், நடிகர் நடிகையரின் விஜயம் என ஏகப்பட்ட விஷயங்களை துபாயில் வைத்து நடத்த பாலிவுட்டினர் ஆர்வம் காட்டுவார்கள்.

என்ஆர்ஐ நடிகைகள் எக்கச்சக்கம்

என்ஆர்ஐ நடிகைகள் எக்கச்சக்கம்

பாலிவுட்டில் வலம் வரும் என்ஆர்ஐ நடிகைகள் நாளுக்கு நாள் பெருத்து வருகிறார்கள்... காத்ரீனா கைப் வந்தார். நர்கீஸ் பக்ரி வந்தார். சன்னி லியோன் வந்தார்... இப்போது ரேஷ்மா டிசவுசா வருகிறார்.

துபாய் அழகுப் புயல்

துபாய் அழகுப் புயல்

பார்க்க படு மிரட்டலாக இருக்கிறார் ரேஷ்மா... வாவ்மா என்று சொல்லும் அளவுக்கு அவரிடம் அழகோ அழகு... பேரழகு.. இந்த கவர்ச்சிப் புயல்தான் மும்பைக்கு இடம் பெயர்ந்து வருகிறார்.

அதே ரெட்டி...

அதே ரெட்டி...

நம்ம சதீஷ் ரெட்டி இருக்கிறாரே ...அதாங்க, வீணா மாலிக்கை வச்சு ரொம்ப காலமாக தி சிட்டி தட் நெவர் ஸ்லீப்ஸ் என்று படம் தயாரிக்கிறாரே அவர்தான்.. அவரது இந்தப் படத்தில்தான் ரேஷ்மாவும் இடம் பெறுகிறாராம்.

ஆசிர்வதிக்கப்பட்டவள் ஐயா நான்...

ஆசிர்வதிக்கப்பட்டவள் ஐயா நான்...

இந்தப் படத்தில் நடிப்பது குறித்து ரேஷ்மா கூறுகையில், பெரிய பெரிய ஸ்டார்களுடன் நடிக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்திருப்பது சந்தோஷமாக இருக்கிறது. நான் ஆசிர்வதிக்கப்பட்டவள். ஹாலிவுட்டின் ஜெரீமி மார் வில்லியம், பாலிவுட்டின் முன்னணி ஸ்டார்களுடன் நடிப்பது பெரிய விஷயம்தானே... என்று பெருமை பொங்கக் கூறுகிறார்.

முழுக்க முழுக்க கவர்ச்சிதான்

முழுக்க முழுக்க கவர்ச்சிதான்

படத்தில் ரேஷ்மாவுக்கு முழுக்க முழுக்க கவர்ச்சி பாத்திரமாம்... நன்றாக பிரகாசிப்பார் என்று கூறுகிறார்கள் ரெட்டி தரப்பினர்.

முதல்ல படத்தை எடுத்து முடிங்க ரெட்டி.. படத்தோட ரீலை விட அதில் நடிப்பவர்கள் எண்ணிக்கை கொஞ்சம் ஓவராத்தான் போய்ட்டிருக்கு...

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts

    English summary
    Dubai and Bollywood have an unexplained bond, a love affair that is apparently getting steamier by the day. Bollywood’s star power is luring many NRI actresses to give up on their flourishing career in India. Dubai based actress Reshma D’souza is ready to bring storm in Bollywood world through her sensation curve and toned body. The beautiful actress is bringing shine on the silver screen through her debut movie “The City That Never Sleeps” which is produced by Satish Reddy.

    சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

    We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Filmibeat sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Filmibeat website. However, you can change your cookie settings at any time. Learn more