'துபாய் சிட்டியா இல்ல... 2.ஓ சிட்டியா..?' - சிட்டிக்காக துபாய் கெட் ரெடி!
துபாய் : பிரமாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகிவரும் '2.O' படத்தின் படப்பிடிப்புப் பணிகள் நிறைவடைந்துவிட்டன. இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா துபாயில் பிரமாண்டமாக அக்டோபர் 27-ம் தேதி நடைபெற இருக்கிறது.
'2.O' படத்தில் ரஜினிக்கு ஜோடியாக எமி ஜாக்ஸன் நடித்திருக்கிறார். பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் வில்லன் வேடத்தில் நடித்துள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார்.

லைகா நிறுவனம் அதிக பொருட்செலவில் இப்படத்தைத் தயாரித்துள்ளது. 400 கோடி ரூபாய் செலவில் தற்போது உருவாகியிருக்கிறது '2.O'. 2D காட்சிகளை 3D-யாக மாற்றும் வகையில் இல்லாமல் படம் எடுக்கும்போதே 3D கேமரா மூலம் எடுக்கப்பட்டது.
இந்த இசை வெளியீட்டில் ஏ.ஆர். ரஹ்மான் லைவ்வாக இசையமைத்து பார்வையாளர்களை மகிழ்விக்க இருக்கிறார். இதற்காக, '2.ஓ' வில்லன் அக்ஷய் குமார் 'துபாய் இஸ் ரெடி' எனும் வீடியோ ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார்.
இந்த நிகழ்ச்சிக்காகச் செல்லும் ரஜினிகாந்த், அக்ஷய் குமார் உள்ளிட்ட படக்குழுவினர் துபாயில் அமைந்துள்ள உலகின் ஒரே ஒரு செவன் ஸ்டார் ஹோட்டலான Burj Al Arab-ல் தங்குகின்றனர். துபாய் '2.O' இசை வெளியீட்டுக்காக வண்ணமயமாகத் தயாராகி இருக்கிறது. இன்னும் சில நாட்களுக்கு துபாய் நகரமே '2.ஓ' நகரமாகத் திகழும்.


Click it and Unblock the Notifications











