twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    முதல் முறையாக துபாயில் பார்க்குமிடமெல்லாம் 2.0 டிஜிட்டல் பேனர்கள்!

    By Shankar
    |

    Recommended Video

    2.0 திரைப்பட ஆடியோ வெளியீட்டு விழா-வீடியோ

    துபாய்: ஒரு ஹாலிவுட் படத்துக்குக் கூட செய்யப்படாத புரமோஷன் ரஜினிகாந்தின் 2.0 படத்துக்கு செய்யப்பட்டு வருகிறது.

    குறிப்பாக நாளை துபாயில் நடக்கவிருக்கும் இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவுக்கு மிகப் பெரிய அளவில் ஏற்பாடுகள் நடக்கின்றன.

    12 கோடி செலவு

    12 கோடி செலவு

    இந்த நிகழ்ச்சிக்கான மொத்த செலவு ரூ 12 கோடி. நிகழ்ச்சி நடக்கும் துபாயின் முக்கிய மால்கள் அனைத்திலும் ரூ 2 கோடி செலவில் எல்இடி திரைகளை அமைத்து பொதுமக்களை இலவசமாகப் பார்க்க வைக்கின்றனர்.

    துபாய் முழுக்க பேனர்கள்

    துபாய் முழுக்க பேனர்கள்

    துபாய் நகரில் இதற்கு முன் எந்தப் படத்துக்கும் வைக்காத அளவுக்கு டிஜிட்டல் பேனர்களை வைத்துள்ளனர். மால்கள், ரயில் நிலையங்கள், சாலைகளின் முக்கிய சந்திப்புகளில் 2.0 பேனர்கள்தான்.

    மெகா பிரஸ்மீட்

    மெகா பிரஸ்மீட்

    இசை நிகழ்ச்சி நாளை நடக்கிறது. அதற்கு ஒரு நாள் முன்பாக, இன்று துபாய் பர்ஜ் அல் அரப் ஹோட்டலின் பெரிய ஹாலில் பிரஸ் மீட் நடக்கிறது. இதில் ரஜினிகாந்த், அக்ஷய் குமார், ஏஆர் ரஹ்மான், ஷங்கர் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். இதில் சர்வதேச செய்தியாளர்கள் கலந்து கொள்கிறார்கள்.

    12000 பார்வையாளர்கள்

    12000 பார்வையாளர்கள்

    இந்த இசை வெளியீட்டு நிகழ்ச்சிக்கு டிக்கெட் விற்பனை செய்யப்பட்டாலும், இலவசமாக 12000 பார்வையாளர்களுக்கு பாஸ் தரப்பட்டுள்ளது. இவர்கள் நிகழ்ச்சி நடக்கும் இடத்தின் இருபக்கத்திலும் நின்று பார்வையிடலாம்.

    துபாயில் ரஜினி

    துபாயில் ரஜினி

    2.0 இசை நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக நேற்றே ரஜினிகாந்த் துபாய் வந்துவிட்டார். அவர் பர்ஜ் அல் அரப் 7 நட்சத்திர ஹோட்டலில் தங்கியுள்ளார்.

    English summary
    Rajinikanth's 2.0 digital banners fixed all over Dubai in the event of 2.0 audio launch
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X