»   »  விளம்பரத்தின் உச்சம்... உலகின் மிக உயர்ந்த துபாய் டவர் முழுக்க ஒளிரும் ரஜினியின் உருவம்!

விளம்பரத்தின் உச்சம்... உலகின் மிக உயர்ந்த துபாய் டவர் முழுக்க ஒளிரும் ரஜினியின் உருவம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

துபாய்: உலகின் மிக உயர்ந்த கட்டடமான துபாயின் பர்ஜ் கலிஃபா இன்று இரவு மட்டும் புதிய நிறத்தில், டிசைனில் ஜொலிக்கப் போகிறது.

இந்த கட்டடத்தின் அடி முதல் நுனி வரை 2.ஓ படத்தில் வரும் ரஜினியின் தோற்றம் வண்ண விளக்குகளால் ஜொலிக்கப்போகிறது.

2.ஓ படத்துக்கான புரமோஷன் பணிகள் ஆர்ப்பாட்டமின்றி, ஆனால் முற்றிலும் புதுமையான முறையில் செய்யப்பட்டு வருகின்றன. எல்லாமே சர்வதேச அளவிலான புரமோஷன்தான். இதற்கென்றே பெரிய தொகையை ஒதுக்கியுள்ளது லைகா.

ஹாட் ஹேர் பலூன்

ஹாட் ஹேர் பலூன்

சில மாதங்களுக்கு முன் 2.ஓ டிசைன் செய்யப்பட்ட பிரமாண்ட வெப்பக் காற்று பலூன்களை ஹாலிவுட், லண்டன் போன்ற இடங்களில் பறக்க விட்டது லைகா நிறுவனம். இது பெரிய அளவில் ஊடகங்களை ஈர்த்தது.

10ஆயிரம் அடி உயரத்தில்

10ஆயிரம் அடி உயரத்தில்

அடுத்து இசை வெளியீட்டு விழாவை ரூ 13 கோடி செலவில் துபாயில் நடத்திக் கொண்டுள்ளனர். இந்த நிகழ்ச்சிக்கு முன் இன்று காலை 10000 அடி உயரத்தில் 2.ஓ விளம்பரத்தைப் பிடித்தபடி வானிலிருந்து குதித்து அதிரடி செய்தனர்.

பர்ஜ் கலிபாவில்

பர்ஜ் கலிபாவில்

இப்போது அடுத்த அதிரடியாக, இசை வெளியீடு நடக்கும் இன்றைய இரவு முழுக்க உலகிலேயே மிக உயர்ந்த கட்டடமான துபாய் பர்ஜ் கலீபாவில் ரஜினியின் உருவம் வண்ண விளக்குகளால் ஜொலிக்கும்படி ஏறபாடு செய்யப்பட்டுள்ளது. அக்ஷய் குமாரின் உருவமும் இதில் இடம்பெற்றுள்ளது.

ரஜினிக்காக

ரஜினிக்காக

இந்தக் கட்டடம் இதற்கு முன் பல்வேறு வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தாலும், ஒரு நடிகர் மற்றும் சினிமாவுக்காக அலங்கரிக்கப்படுவது இதுவே முதல் முறை.

English summary
World's tallest building - the Burj Khalifa - will look very different tonight with Rajinikanth's photo

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil