மேடையில் மோகன்லாலை கிழி கிழியென கிழித்த நடிகை.. மொத்த கூட்டமும் கப்சிப்.. காரணம் என்ன தெரியுமா?

சென்னை: மலையாள நடிகை மீதான பாலியல் வன்கொடுமை வழக்கில் இருந்து நடிகர் திலீப் விடுவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவரது புதிய படமான 'பா பா பா' படத்தில் மோகன்லால் சிறப்புத் தோற்றத்தில் நடித்திருப்பது கடும் விமர்சனங்களை கிளப்பியுள்ளது. டப்பிங் கலைஞரும் நடிகையுமான பாக்யலட்சுமி, நடிகர் மோகன்லாலை கடுமையாக விமர்சித்துள்ளார்.

2017 ஆம் ஆண்டு மலையாள நடிகையை ஓடும் காரில் ஒரு பிரபலமான நடிகையைத் தாக்கி, அந்தச் சம்பவத்தை வீடியோ எடுத்ததற்காக ஆறு பேர் தண்டிக்கப்பட்டனர், ஆனால் இந்த குற்றத்திற்கு மூளையாகச் செயல்பட்டதாகக் குற்றம் சாட்டப்பட்ட திலீப், போதிய ஆதாரம் இல்லாததால் விடுவிக்கப்பட்டார். 8 ஆண்டுகளாக நடைபெற்று வந்த இந்த வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்ட திலீப்புடன் இணைந்து மோகன்லால் அந்த போஸ்டரை பகிர்ந்து 'பா பா பா' படத்தை விளம்பரப்படுத்தியிருப்பது பெரும் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.

Dileep Mohanlal Bhagyalakshmi
Photo Credit:

மோகன்லால்: மலையாள டப்பிங் கலைஞரும், நடிகையும், சமூக ஆர்வலருமான பாக்யலட்சுமி, கேரள சர்வதேச திரைப்பட விழாவில் (IFFK) பேசிய அவர், தீர்ப்பு வெளியான உடன், 'பா பா பா' படத்தின் போஸ்டர் பகிரப்பட்டுள்ளது. அதை பகிர்வதற்கு முன்பு மோகன்லால் ஒரு கணம் கூட யோசிக்கவில்லையா? நடிகை பாலியல் வன்கொடுமைக்கு ஆளானபோது பாதிக்கப்பட்ட நடிகைக்கும் ஆரம்பத்தில் ஆதரவளித்த மோகன்லால், இப்போது குற்றம் சாட்டப்பட்டவருடன் நிற்பது உணர்ச்சியற்ற, சிந்தனையற்ற செயல், மோகன்லாலின் இந்த முடிவு தவறான முன்னுதாரணம். இத்தகைய செல்வாக்குள்ள ஒருவர் இதைச் செய்யும்போது, ​​பாதிக்கப்பட்டவருக்கு அவர் ஒரு தவறான செய்தியை சொல்கிறார். இது வெறும் சினிமா பற்றியது மட்டுமல்ல. இது நெறிமுறைகள் பற்றியது. நாம் பொதுவெளியில் எதை ஆதரிக்கிறோம் என்பது பற்றியது.

கண்டித்த நடிகை: இந்தத் தீர்ப்பை ஒரு பெண்ணால் ஒருபோதும் கொண்டாட முடியாது, நீண்ட சட்ட போராட்டத்தை நடத்தி வந்த நடிகை இந்த தீர்ப்பால் மனமுடைந்து போய் இருக்கிறார். அவருக்கு நாம் எவ்வளவு ஆறுதல் கூறினாலும் போதாது. ஆனால், திலீப் விடுதலையான பிறகு, எதையோ சாதித்துவிட்டது போல, மகிழ்ச்சியாக பேட்டி அளித்தார். ஆனால், பாதிக்கப்பட்டவர் பறிதவித்து நிற்க வேண்டுமா ? நடிகை அனுபவித்த துன்பம் தீர்ப்புடன் தொடங்கவில்லை. அது எட்டு ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கியது. பாதிக்கப்பட்டவர் உணர்ச்சி ரீதியாகவும், உளவியல் ரீதியாகவும், பொதுவெளியிலும் இடைவிடாத விசாரணைக்கு ஆளார் என பாக்யலட்சுமி தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X