”தெய்வம் சதி செய்தது”அப்பாவின் இழப்பை தாங்க முடியாமல் உடைந்து போன ரவீனா.. வைரலாகும் வீடியோ
சென்னை: நடிகையும் டப்பிங் கலைஞருமான ரவீனா ரவி தனது தந்தையின் உயிரிழப்பால் மிகவும் உடைந்து போயுள்ளார்.
தனது ட்விட்டர் பக்கத்தில் அப்பா பாடிய பாடல் வீடியோவை ஷேர் செய்து அவர் பதிவிட்டுள்ள உருக்கமான போஸ்ட் ரசிகர்களை கண்ணீர் கடலில் ஆழ்த்தி உள்ளது.
சினிமா பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் என பலரும் ரவீனா மற்றும் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.

டப்பிங் கலைஞர்
ஷாலினி, நயன்தாரா, தேவயாணி, காவ்யா மாதவன், கோபிகா உள்ளிட்ட சினிமா பிரபலங்களுக்கு பின்னணி குரல் கொடுத்து வந்த டப்பிங் கலைஞர் ஸ்ரீஜாவின் மகள் தான் ரவீனா ரவி. முன்னணி நடிகைகளுக்கு இவரும் டப்பிங் கலைஞராக பணியாற்றி வருகிறார். டப்பிங் கலைஞர் ஸ்ரீஜாவின் கணவரும் ரவினா ரவியின் தந்தையுமான ரவீந்திரநாதன் திடீரென உடல்நலக் குறைவு காரணமாக உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

ஹீரோயினாக உயர்வு
ஒரு கிடாயின் கருணை மனு படம் மூலம் ஹீரோயினாக முன்னேறிய ரவீனா ரவி, கடந்த ஆண்டு வெளியான காவல்துறை உங்கள் நண்பன் படத்திலும் சிறப்பாக நடித்து பாராட்டுக்களை அள்ளினார். ராக்கி மற்றும் வட்டார வழக்கு உள்ளிட்ட படங்களிலும் இவர் நடித்து வருகிறார்.

தந்தை மரணம்
பிரபல டப்பிங் கலைஞர் ஸ்ரீஜாவின் கணவரும் டப்பிங் கலைஞர் மற்றும் நடிகையுமான ரவீனாவின் தந்தையுமான ரவிந்திரநாத் திடீரென உடல் நலக் குறைவு காரணமாக உயிரிழந்தது மிகப்பெரிய சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. ரவீனாவுக்கும் அவரது அம்மாவுக்கும் சினிமா பிரபலங்களும் ரசிகர்களும் ஆறுதல் கூறி வருகின்றனர்.

விஷால் ஆறுதல்
"ரவீனா ரவியின் தந்தை உயிரிழந்தது குறித்து அறிந்து மிகவும் வருத்தமடைந்துள்ளேன். உங்களோடு எப்போதும் நாங்க துணையாக கூட இருப்போம்" என நடிகர் விஷால் தனது ட்விட்டர் பக்கத்தில் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்திருந்தார். விஷாலின் இரங்கல் ட்வீட்டுக்கு ரவீனா நன்றி தெரிவித்தார்.

தெய்வம் சதி செய்தது
இந்நிலையில், அப்பா ரவிந்திரநாத் பாடிய "கண்ணே கலைமானே" பாடல் வீடியோவை ஷேர் செய்து.. அந்த பாடலில் இடம்பெறும் "தெய்வம் சதி செய்தது" என்கிற வரிகளை கேப்ஷனாக போட்டுள்ளார். மேலும், அப்பா நீங்க எப்பவுமே என் கூடவும் அம்மா கூடவும் இருப்பீங்க என்றும் உருக்கமாக பதிவிட்டுள்ளார்.

அப்பாவின் இழப்பை ஈடு செய்ய முடியாது
டப்பிங் கலைஞரும் நடிகையுமான ரவீனா ரவியின் ட்வீட்டுக்கு கீழே ஏகப்பட்ட ரசிகர்கள் அவருக்கு ஆறுதல் கூறி வருகின்றனர். அப்பாவின் இழப்பை நிச்சயம் யாராலும் ஈடு செய்ய முடியாது என கமெண்ட்டுகள் குவிந்து வருகின்றன.


Click it and Unblock the Notifications











