எல்லாமே என் வாய்ஸ்தான்… டப்பிங் ஆர்டிஸ்ட் ரவீணா வெளியிட்ட வீடியோ!

சென்னை : டப்பிங் ஆர்டிஸ்ட் ரவீணா தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அது அவர் முன்னணி நடிகைகள் யாருக்கெல்லாம் வாய்ஸ் கொடுத்திருக்கிறார் என்பதை ரசிகர் ஒருவர் எடிட் செய்த வீடியோவாகும்.

Recommended Video

டிக் டாக்கில் கலக்கும் சாமானியர்.. இன்னாம்மா ஆடுறார் - வீடியோ

சினிமாவில் கதை, பாடல்கள், நடிப்பு போன்றவை எந்த அளவிற்கு முக்கியமோ அந்த அளவிற்கு வசனங்கள் முக்கியம், ஒரு காட்சியில் வசனங்கள் தான் மிகப்பெரிய உணர்ச்சியை உருவாக்குகிறது. தமிழ் சினிமாவில் வசனங்கள் எவ்வளவு முக்கியம் என்பது மற்றவர்கள் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.

 Dubbing artist Raveena posted a video on her Twitter page

எம்.ஜி.ஆர், சிவாஜி, ரஜினி, கமல் முதல் இன்று வரை பல நடிகர்களும் மக்களிடையே பிரபலமாக வசனங்கள் முக்கிய காரணமாக இருந்திருக்கிறது. காட்சிகள் எடுக்கும் விதம் சுமாராக இருந்தால் கூட வசனங்கள் ஈர்க்கும் படியாக இருந்தால் மக்களால் ரசிக்கும் படியாக அமையும் என்பதில் சந்தேகம் இல்லை. ஆரம்ப காலங்களில் டப்பிங் தமிழ் சினிமாவில் முக்கிய அங்கமாக இருந்தாலும் உலக சினிமா இயக்குனர்கள் லைவ் ரெக்கார்டிங் முறையை பயன்படுத்தினர்.

 Dubbing artist Raveena posted a video on her Twitter page

ஆனாலும் தமிழ் சினிமாவில் டப்பிங் என்பது வழக்கமாக நடந்து வரும் அம்சமாக அமைந்துள்ளது. திரையரங்குகளில் நம்மை அதிக கவனத்துடன் வைத்திருப்பது ஒலிதான் அதிலும் முக்கியமாக நடிகர்களின் குரல்தான். ஆனால் உண்மையில் அது நடிகர்களின் சொந்த குரலா என்பது கூட நமக்கு தெரியாது. இந்த மாயை செய்வது டப்பிங்தான்.

 Dubbing artist Raveena posted a video on her Twitter page

 Dubbing artist Raveena posted a video on her Twitter page

தமிழ் தெரியாத வேறு மொழி நடிகர்களோ அல்ல குரல் வலம் குறைந்த நடிகர்கள் கூட தைரியமாய் நடிக்க ஒரு முக்கிய காரணம் இந்த டப்பிங்தான். நடிகர்கள் வசனத்திற்கேற்ப வாய் அசைத்தால் போதும் அவர்களின் வயதிற்கேற்ப வேறு ஒரு வாய்ஸ் ஆர்டிஸ்டை வைத்து டப்பிங் செய்துவிடுவார்கள். பல முறை சில படங்களை பார்க்கும்போது அதில் நடித்திருக்கும் முக்கிய கதாபாத்திரத்தின் குரல் கூட அவர்களுக்கு சொந்தமில்லை என்று அறியப்படும்போது ஆச்சர்யம் அடைகிறோம்.

 Dubbing artist Raveena posted a video on her Twitter page

அந்த வரிசையில் வாய்ஸ் ஆர்டிஸ்டாகிய ரவீணா ரசிகர்கள் பலருக்கும் தன் ட்விட்டர் பக்கத்தின் மூலம் அதிர்ச்சியை கொடுத்துள்ளார். ரவீணா சிறுவயது முதல் வாய்ஸ் ஆர்டிஸ்டாக இருந்திருக்கிறார். தற்போது அவர் தன் ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அது அவர் முன்னணி நடிகைகள் யாருக்கெல்லாம் வாய்ஸ் கொடுத்திருக்கிறார் என்பதை ரசிகர் ஒருவர் எடிட் செய்த வீடியோவாகும்.

 Dubbing artist Raveena posted a video on her Twitter page

 Dubbing artist Raveena posted a video on her Twitter page

அதில் பலரும் அந்த வீடியோவை பார்த்து ஆச்சர்யத்தில் ஆழ்ந்துள்ளனர். ரவீணா அவர்கள் ஐ படத்தில் எமி ஜாக்சன் வாய்ஸ், கத்தி படத்தில் சமந்தா வாய்ஸ், தெறி படத்தில் எமி வாய்ஸ், வேலையில்லா பட்டதாரி படத்தில் அமலா பால் வாய்ஸ் என பல முன்னணி நடிகைகளுக்கு வாய்ஸ் கொடுத்துள்ளார். அதுமட்டுமின்றி நயன்தாரா நடித்த பல மலையாளம் படத்திற்கும் இவர்தான் வாய்ஸ் கொடுத்துள்ளார்.

 Dubbing artist Raveena posted a video on her Twitter page

தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளிலும் பல நடிகைகளுக்கு வாய்ஸ் கொடுத்துள்ளார். இப்படி பல நடிகைகளுக்கு வாய்ஸ் கொடுத்த இவரை ரசிகர்களுக்கு அதிகமாக தெரிந்திருக்க வாய்ப்பில்லை ஆனால் இவர் பகிர்ந்த இந்த வீடியோ மூலம் பல ரசிகர்களும் ஆச்சர்யத்தில் ஆழ்ந்துள்ளனர். தற்போது இவர் மாஸ்டர் படத்தில் மாளவிகா மோகனிற்கு வாய்ஸ் கொடுத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

 Dubbing artist Raveena posted a video on her Twitter page

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X