விஷால்31“ படத்தில் இணைந்த டப்பிங் கலைஞர் ரவீனா ரவி
சென்னை : பிரபல டப்பிங் கலைஞரான ரவீனா ரவி விஷால்31 படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார்.
இவர், ஒரு கிடாயின் கருணை மனு திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.
இவர் புகழ் பெற்ற டப்பிங் கலைஞரான ஸ்ரீஜா ரவியின் மகள் ஆவார்.

ஆர்யா வில்லனாக
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் விஷால், தற்போது எனிமி படத்தில் நடித்துள்ளார். ஆனந்த் சங்கர் இயக்கும் இப்படத்தில், விஷாலுக்கு வில்லனாக ஆர்யா நடிக்கிறார். கதாநாயகியாக மிருனாளினி வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தில் உள்ளது.

டிம்பிள் ஹயாதி நாயகி
அறிமுக இயக்குனர் து.பா.சரவணன் இயக்கத்தில் உருவாகும் படத்திற்கு பூஜை போடப்பட்டது. இப்படத்திற்கு விஷால்31 என தற்காலிகமாக பெயர் வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக தேவி2 திரைப்படத்தின் மூலம் தமிழ் திரைத்துறையில் அறிமுகமான டிம்பிள் ஹயாதி நடித்துள்ளார்.

லீட்ரோல்
பிரபல டப்பிங் கலைஞரான ரவீனா ரவி விஷால்31 படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். இவர், ஒரு கிடாயின் கருணை மனு திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இதையடுத்து, காவல் துறை உங்கள் நண்பன் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். விஜய்யின் மாஸ்டர் படத்தில் நடிகை மாளவிகா மோகனுக்கு குரல் கொடுத்துள்ளார் ரவீனா ரவி.

இசை
இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். குள்ளநரி கூட்டம் இயக்குனர் பாலாஜி, தேன் பட இயக்குனர் கணேஷ் விநாயக் ஆகியோரிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர். எது தேவையோ அதுவே தர்மம் என்ற குறும்படத்தையும் இயக்கி பல விருதுகளை பெற்றார். தற்போது இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.


Click it and Unblock the Notifications











