twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஒரே நேரத்தில் பல படங்களுக்கு டப்பிங், எடிட்டிங் பணிகள் தொடக்கம்.. பிஸியான ஸ்டூடியோக்கள்!

    By Vignesh Selvaraj
    |

    சென்னை : தமிழ் சினிமாவில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக நடைபெற்றுவந்த முழு ஸ்ட்ரைக் நிறைவடைந்ததை அடுத்து, இன்று முதல் சினிமா தொடர்பான அனைத்துப் பணிகளும் தொடங்கி இருக்கின்றன. கார்த்திக் சுப்புராஜ் இயக்கியிருக்கும் 'மெர்க்குரி' திரைப்படம் தமிழக திரையரங்குகளில் இன்று வெளியாகியிருக்கிறது.

    மார்ச் 1 முதல் புதிய படங்கள் ரிலீஸும், மார்ச் 16 முதல் டப்பிங், எடிட்டிங், ரீ-ரெக்கார்டிங், கிராஃபிக்ஸ் பணிகள், சினிமா விழாக்கள் உள்ளிட்ட ஒரு பணிகளும் நடைபெறாததால் சினிமாத்துறையே ஸ்தம்பித்தது. கடந்த செவ்வாய்க்கிழமை திரையுலக ஸ்ட்ரைக் வாபஸ் பெற்றுக்கொள்ளப்பட்டதை அடுத்து இன்று முதல் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

    Dubbing editing works starts in tamil cinema

    பல படங்களுக்கு டப்பிங், எடிட்டிங் பணிகள் தொடங்கவிருப்பதால் சென்னையில் இருக்கும் அத்தனை ஸ்டூடியோக்களும் பிஸியாகி இருக்கின்றன. ஒரே நேரத்தில் பல படங்களுக்கான பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.

    உதயநிதி ஸ்டாலின், தமன்னா நடிப்பில் சீனு ராமசாமி இயக்கத்தில் ஷூட்டிங் முடிந்திருக்கும் 'கண்ணே கலைமானே' படத்தின் டப்பிங் பணிகள் இன்று தொடங்கப்பட்டுள்ளன. இந்தத் தகவலை இயக்குநர் சீனு ராமசாமி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

    English summary
    After the strike is over, all the work related to tamil cinema begins from today. All studios in Chennai have been busy for dubbing and editing works for many films.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X