twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஹிந்தியில டப்பிங் ரொம்ப கேவலமா பண்ணுவாங்க.. இயக்குனர் சுதா கொங்கரா!

    |

    சென்னை: துரோகி, இறுதிச்சுற்று, சூரரைப்போற்று என ஹாட்ரிக் வெற்றிகளை கொடுத்தவர் இயக்குனர் சுதா கொங்கரா

    தமிழ் சினிமாவின் மிக முக்கிய இயக்குனர்களில் ஒருவராக உள்ள இவர் இப்போது ஹிந்தியில் சூரரைப்போற்று படத்தை இயக்கி வருகிறார்

    இந்த நிலையில் தனியார் யூடியூப் சேனல் ஒன்று நேர்காணலில் பேசிய சுதா கொங்கரா ஹிந்தியில் டப்பிங் ரொம்ப கேவலமா பண்ணுவாங்க என ஓபனாக பேசியுள்ளார்.

    அப்படி போடு...கொல மாஸா வந்த தலைவர் 169 அப்டேட் ...எப்போ ரிலீஸ் தெரியுமா? அப்படி போடு...கொல மாஸா வந்த தலைவர் 169 அப்டேட் ...எப்போ ரிலீஸ் தெரியுமா?

    இயக்குனராக அறிமுகமானார்

    இயக்குனராக அறிமுகமானார்

    இயக்குனர் சுதா கொங்கரா இப்பொழுது தமிழ் சினிமாவில் மிக முக்கிய இயக்குனர்களில் ஒருவராக உள்ளார் சுதா கொங்கரா இயக்கத்தில் வெளியாகும் திரைப்படங்கள் இந்திய அளவில் அனைவரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது இயக்குனர் மணிரத்னத்திடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த சுதா கொங்கரா துரோகி என்ற படத்தை இயக்கியதன் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார்

    தோல்வியை சந்தித்தது

    தோல்வியை சந்தித்தது

    விஷ்ணு விஷால் மற்றும் ஸ்ரீகாந்த் ஹீரோவாக நடித்த திரைப்படம் மிகவும் வித்தியாசமான ஆக்ஷன் கதைகளில் வெளியானது ஆனால் இந்த படம் சரியாக ரசிகர்களை சென்றடைய வில்லை அதனால் படம் தோல்வியை சந்தித்தது இந்த நிலையில் அடுத்ததாக சுதா கொங்கரா இயக்கிய திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளிலும் வெளியாகி பட்டையை கிளப்பியது

    பாக்ஸிங் கோச்சாக

    பாக்ஸிங் கோச்சாக

    அதுவரை சாக்லேட் பாயாக வலம் வந்து கொண்டிருந்த மாதவன் இறுதிச்சுற்று படத்தில் முரட்டுத்தனமான பாக்ஸிங் கோச்சாக நடிக்கவைத்து ரசிகர்களுக்கு புது அனுபவத்தை கொடுத்தார் இறுதிச்சுற்று திரைப்படம் சுதாவின் திரை வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது தமிழ் மற்றும் இந்தி என இரு மொழிகளிலும் ஒரே நேரத்தில் இந்த படம் வெளியாகி சக்கைபோடு போட்டது தமிழ் மற்றும் இந்தியில் கிடைத்த மாபெரும் வரவேற்பைத் தொடர்ந்து இறுதிச்சுற்று படத்தை தெலுங்கில் குரு என்ற பெயரில் இயக்கினார் இந்த படத்தில் நடிகர் வெங்கடேஷ் ஹீரோவாக நடித்து இருப்பார் தமிழில் நடித்த ரித்திகா சிங் இந்த படத்திலும் கதாநாயகியாக நடித்து கலக்கி இருப்பார்.

    டப்பிங் ரொம்ப கேவலமா பண்ணுவாங்க

    டப்பிங் ரொம்ப கேவலமா பண்ணுவாங்க

    சூர்யாவின் நடிப்பில் வெளியான சூரரைப்போற்று உலக அளவில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது மேலும் ஆஸ்கர் விருது பட்டியலிலும் இடம்பெற்றது . உண்மை சம்பவங்களின் அடிப்படையில் எடுக்கப்பட்ட சூரரைப்போற்று தமிழில் எந்த அளவிற்கு கொண்டாடப்பட்டதே அதே அளவிற்கு வட இந்தியாவிலும் இப்படம் பெரிதாக கொண்டாடப்பட்டது இந்த நிலையில் சமீபத்தில் தனியார் யூடியூப் சேனல் ஒன்று நேர்காணலில் பேசிய சுதா கொங்கரா தமிழ், தெலுங்கு படங்களை இந்தியில் மிக கேவலமாக டப்பிங் செய்வார்கள். ஆனால் ஹிந்தியில் உரிமை 5 கோடிக்கும்,10 கோடிக்கும்,15 கோடிக்கும் போகிறது எனவே தென்னிந்திய படங்களும் பான் இந்தியா படங்களாக கொண்டாடப்படுகிறது

    English summary
    Dubbing is very poor in Hindi Movies Says Sudha kongara
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X