கமலின் இந்தியன் 2, மாஸ்டர், சக்ராவைத் தொடர்ந்து.. விஜய் சேதுபதி படத்தின் டப்பிங்கும் தொடங்கியது!

By

சென்னை: இந்தியன் 2, மாஸ்டர், சக்ரா உள்ளிட்ட படங்களைத் தொடர்ந்து விஜய் சேதுபதி நடிக்கும் படத்தின் டப்பிங் இன்று தொடங்கி உள்ளது.

Recommended Video

எதிர் காலத்தை கனித்த உலகநாயகன் | Kamal Hassan, Vijay Sethupathi | Marudhanayagam

விஜய் சேதுபதி ஹீரோவாக நடித்து வரும் படம், 'யாதும் ஊரே யாவரும் கேளிர்'. அறிமுக இயக்குனர் வெங்கட கிருஷ்ண ரோகாந்த் இயக்குகிறார்.

இயக்குநர் ஜனநாதனிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர் இவர். படத்தைச் சந்திரா ஆர்ட்ஸ் சார்பாக, இசக்கி துரை தயாரிக்கிறார்.

மகிழ் திருமேனி

மகிழ் திருமேனி

சினி இன்னோவேஷன்ஸ் சார்பில் ஆர்.கே.அஜெய்குமார் இணை தயாரிப்பு செய்கிறார். விஜய் சேதுபதி ஜோடியாக மேகா ஆகாஷ் நடிக்கிறார். வில்லனாக இயக்குனர் மகிழ் திருமேனி நடிக்கிறார். மற்றும் விவேக், இயக்குனர் மோகன் ராஜா, கனிகா உட்பட பலர் நடிக்கின்றனர். இதன் ஷூட்டிங் கொடைக்கானலில் தொடங்கி, கும்பகோணம், சென்னை உட்பட பல பகுதிகளில் நடந்துள்ளது.

லாக்டவுன்

லாக்டவுன்

இந்தப் படத்தின் கதை சர்வதேச அளவில் நடக்கும் பிரச்னையை பேசுவதாக இதன் இயக்குனர் ஏற்கனவே கூறியிருந்தார். இதன் ஷூட்டிங் பெரும்பாலும் முடிந்துவிட்டன. பேட்ச் ஒர்க் மட்டுமே பாக்கி இருக்கிறது என்றும் அதோடு ஷூட்டிங் முடிந்ததும் என்றும் படக்குழு தெரிவித்திருந்தது. இந்நிலையில்தான், கொரோனாவுக்காக லாக்டவுன் பிறப்பிக்கப்பட்டது.

சினிமா பணிகள்

சினிமா பணிகள்

இந்த லாக்டவுன் காரணமாக, சுமார் 2 மாதமாக சினிமா தொடர்பான பணிகள் எதுவும் நடக்கவில்லை. படப்பிடிப்புகள் தொடங்க நாட்கள் ஆகும் என்றாலும், போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகளைத் தொடங்க தமிழக அரசு அனுமதி அளித்தது. இதையடுத்து டப்பிங், பின்னணி இசை சேர்ப்பு உள்ளிட்ட பணிகள் கடந்த 11 ஆம் தேதி முதல் நடந்து வருகின்றன.

போஸ்ட் புரொடக்‌ஷன்

போஸ்ட் புரொடக்‌ஷன்

கமலின் இந்தியன் 2, விஜய்யின் மாஸ்டர் உட்பட பல்வேறு படங்களின் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடந்துவரும் நிலையில், விஜய் சேதுபதி நடக்கும் யாதும் ஊரே யாவரும் கேளீர் படத்தின் டப்பிங் பணிகளும் இன்று தொடங்கியுள்ளன. சென்னை ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள நாக் ஸ்டுடியோவில் இந்த பணிகள் தொடங்கி நடக்கின்றன. விஜய் சேதுபதி டப்பிங் பேசி வருகிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X