தேர்தல் வந்து இருக்கக்கூடாது.. வன்மத்தோடு என்னை திட்றாங்க.. நடிகர் ராதா ரவி வேதனை!

சென்னை: தமிழ் சினிமாவின் மூத்த நடிகரான ராதா ரவி, மிரட்டலான வில்லனாக தமிழ் சினிமாவில் வலம் வந்தவர். தற்போதும் நடித்து வரும் இவர், இன்று நடந்த டப்பிங் யூனியன் தேர்தலில் வாக்களிக்க கைத்தடி உதவியுடன் நடந்து வந்த வீடியோ இணையத்தில் வைரலான நிலையில், என்னை பலர் மோசமான வார்த்தையால் திட்டுகிறார்கள் அதை பற்றி எனக்கு கவலை இல்லை என்றார்.

நடிகர் ராதா ரவியின் வில்லத்தனமான நடிப்புக்கு ஏராளமான ரசிகர்களும் இருக்கின்றனர். தற்போது ராதாரவி படங்களில் குணச்சித்திர ரோல்கள், நெகடிவ் ரோல்கள் போன்றவற்றில் நடித்து வருகிறார். டப்பிங் யூனியனுக்கு நீண்ட காலமாக தலைவராக இருந்தவர் ராதாரவி.

Dubbing union election Radha ravi interview

டப்பிங் யூனியன் தேர்தல்: இதனால் டப்பிங் யூனியனுக்கு தலைவர் தேர்தல் நடைபெற இருப்பதாக சில மாதங்களுக்கு முன் அறிவித்து இருந்தார்கள். இதில் ராதா ரவியும், நீண்ட நாள் டப்பிங் யூனியன் பொறுப்புகளில் இருப்பவரும், சின்னத்திரை நடிகர் சங்கத்தின் தலைவராக இருந்தவருமான ராஜேந்திரனும் போட்டியிடுகிறார்கள். இதில், ராஜேந்திரனுக்கு நிறைய செல்வாக்கு இருப்பதால் அவர் வெற்றி பெற வாய்ப்பு அதிகம் இருப்பதாக சொல்லப்படுகிறது.

என்னாச்சு அவருக்கு: இந்நிலையில் இன்று டப்பிங் யூனியன் தேர்தல் நடைபெற்றது. இதில் பிரபலங்கள் பலருமே வாக்களித்து வருகின்றனர். இந்த தேர்தலில் வாக்களிக்க நடிகர் ராதா ரவி, நடக்க முடியாமல் வாக்கிங் ஸ்டிக் உதவியுடன் வந்து இருந்தார். இந்த வீடியோ தான் இணையத்தில் வைரலானது. இதை பார்த்த பலரும் என்ன ஆச்சு? என்ன பிரச்சனை ? என்றெல்லாம் கேட்டு வருகிறார்கள்.

தேர்தல் வந்து இருக்கக்கூடாது: தற்போது யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்து ராதா ரவி, இவர் வரமாட்டார் படுத்துவிட்டார் என்றேல்லாம் சொன்னார்கள். எனக்கு காலில் வலி இருக்கிறது அவ்வளவு தான். இந்த தேர்தல் வந்து இருக்கவே கூடாது, தேர்தல் வராது என்று நான் நினைத்து இருந்துவிட்டேன். நான் தலைவராக நிற்கிறேன், பொருளாளராக சாஜித்தா நிற்கிறார். இதுவரைக்கும் 200க்கும் மேல் ஓட்டு பதிவாகி இருக்கிறது. இன்னும் 600 ஓட்டு பதிவாகும் என்று நினைக்கிறேன்.

வன்மத்தோடு திட்டுறாங்க: யூனியனில் செய்ய வேண்டி அனைத்தையும் செய்து விட்டேன். இனிமேல் செய்வதற்கு எதுவும் இல்லை. இது சங்க உறுப்பினர்களுக்கு நன்றாக தெரியும். எதிர் அணி ராஜேந்திரன் என்னை திட்டி வருகிறார். யார் யாரோ வன்மத்தோடு திட்டுறாங்க, அவர் என்ன வேண்டுமானாலும் திட்டட்டும், இது போன்ற பல பிரச்சனைகளை நான் பார்த்து இருக்கிறேன். எல்லாம் தேர்தல் வரைக்கும் தான் தேர்தல் முடிந்த பிறகு அனைவரும் ஒன்றாகி விடுவோம் என்று ராதா ரவி தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X