For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    டப்ஸ்மாஷில் கலக்கிய 'ஜூனியர் நஸ்ரியா' கையில் இப்போ மூணு படம்!

    By Vignesh Selvaraj
    |
    டப்ஸ்மாஷில் கலக்கிய 'ஜூனியர் நஸ்ரியா' கையில் இப்போ மூணு படம்!- வீடியோ

    சென்னை : 'சீமத்துரை' எனும் படத்தில் புதுமுகம் வர்ஷா பொல்லம்மா நடிக்கிறார். கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த இந்த 'ஜூனியர் நஸ்ரியா' கலக்கலான டப்ஸ்மாஷ் வீடியோக்களின் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர்.

    சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைக்காதா என பல வழிகளில் முட்டி மோதி ஏங்கித் தவிப்போருக்கு மத்தியில், அடுத்தவர்களை இமிடேட் செய்யும் டப்ஸ்மாஷ் மூலம், படத்தில் நடிக்க வாய்ப்பு பெற்று அசத்தி உள்ளார் வர்ஷா பொல்லம்மா.

    Dubsmash fame got cinema chances

    கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த வர்ஷாவுக்கு, தமிழில் பேசவும் எழுதவும் தெரியுமாம். சினிமாவில் நடிப்பது தான் இவரது லட்சியம். ஆனாலும், வாய்ப்புக் கிடைக்கவில்லை. இந்த நேரத்தில் தான் 'ராஜா ராணி' படத்தில், நஸ்ரியா பேசும் வசனத்தை பேசி அதை வீடியோவாக ரெடி செய்து சமூக வலைதளங்களில் வெளியிட்டார்.

    அதற்கு பயங்கர வரவேற்பு கிடைத்து தென் மாநிலங்கள் முழுவதும் பிரபலமாகி விட்டார். இதன்மூலம், 'சீமத்துரை' உள்ளிட்ட மூன்று படங்களில் நடிக்கும் வாய்ப்பு இவருக்குக் கிடைத்துள்ளது. சீமத்துரை படத்தில் அவருக்கு ஜோடியாக கீதன் நடித்துள்ளார்.

    நஸ்ரியா சாயலில் இருக்கும் இவரை ரசிகர்கள் ஜூனியர் நஸ்ரியா என்றே அழைத்து வருகிறார்கள். கேரளாவில் அந்த நஸ்ரியா என்றால் கர்நாடகத்துக்கு இந்த ஜூனியர் நஸ்ரியா வர்ஷா பொல்லம்மா.

    நஸ்ரியாவை சந்தித்து, அவருடன் செல்பி எடுக்க வேண்டும் என்பது வர்ஷாவின் ஆசையாம். திருமணத்திற்குப் பிறகு, இப்போது நடிக்க ரெடியாகிருக்கும் நஸ்ரியாவுக்கு போட்டியாக அதே தோற்றத்தில் இன்னொருவர் சினிமாவில் நடிக்கவிருப்பது தெரிந்தால் பாவம் நஸ்ரியா.

    English summary
    In the film 'Seemaithurai', new comer Varsha bollamma plays the heroine role. This 'Junior Nazriya' from Karnataka is famous for dubsmash videos.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X