»   »  'டப்ஸ்மாஷ்' பிரபலம் மிருணாளினி.. விஜய் சேதுபதியுடன் நடிக்கிறார்!

'டப்ஸ்மாஷ்' பிரபலம் மிருணாளினி.. விஜய் சேதுபதியுடன் நடிக்கிறார்!

Posted By:
Subscribe to Oneindia Tamil
ஹெரோஇனே ஆகும் 'டப்ஸ்மாஷ்' பிரபலம் மிருணாளினி

சென்னை : பெங்களூரில் வசிக்கும் மிருணாளினி என்பவரின் டப்ஸ்மாஷ் வீடியோக்கள் இணையத்தில் செம்ம வைரல்.

மிருணாளினிக்கு டப்ஸ்மாஷ் மூலம் பல பட வாய்ப்புக்கள் கிடைத்தன. தற்போது இவர் 'நகல்' என்ற படத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார்.

லேட்டஸ்டாக, விஜய் சேதுபதி நடிக்கும் 'சூப்பர் டீலக்ஸ்' படத்தில் ஒரு முக்கியமான ரோலில் நடிக்க கமிட் ஆகியுள்ளார் டப்ஸ்மாஷ் பிரபலம் மிருணாளினி.

சூப்பர் டீலக்ஸ்

சூப்பர் டீலக்ஸ்

'ஆரண்ய காண்டம்' வெளியாகி ஆறு வருடங்களுக்குப் பிறகு தியாகராஜன் குமாரராஜா இயக்கும் படம் 'சூப்பர் டீலக்ஸ்'. இந்தப் படத்தில் விஜய் சேதுபதி, ஃபஹத் பாசில், சமந்தா, ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கின்றனர்.

மிருணாளினி

மிருணாளினி

இந்தப் படத்தில் விஜய் சேதுபதி போட்டிருக்கும் லேடி கெட்டப் செம வைரல் ஆகியுள்ளது. தற்போது இந்தப் படத்தில் தானும் நடித்துள்ளதாக டப்ஸ்மாஷ் மூலம் சமூக வலைதளங்களில் புகழடைந்த மிருணாளினி தெரிவித்துள்ளார்.

ஃபேஸ்புக்கில் பகிர்ந்த டப்ஸ்மாஷ் பிரபலம்

ஃபேஸ்புக்கில் பகிர்ந்த டப்ஸ்மாஷ் பிரபலம்

'சூப்பர் டீலக்ஸ்' படக்குழுவுடன் தான் இருக்கும் புகைப்படம் ஒன்றை தனது அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில் மிருணாளினி பகிர்ந்துள்ளார். அவர் படத்தில் என்ன கேரக்டரில் வருகிறார் எனும் தகவல் இன்னும் வெளியாகவில்லை.

நிகழ்ச்சிகளில் பங்கேற்பு

நிகழ்ச்சிகளில் பங்கேற்பு

ஏற்கெனவே தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும், பல மேடை நிகழ்ச்சிகளிலும் இவர் பங்கெடுத்துள்ளார். சமீபத்தில் நடைபெற்ற 'வேலைக்காரன்' ஆடியோ வெளியீட்டு விழாவில் மேடையில் ஆடி அசத்தினார் மிருணாளினி. ஆங்கில இதழ் ஒன்றின் அட்டைப்படத்திலும் மிருணாளினி தோன்றியுள்ளார்.

கதாநாயகி

கதாநாயகி

'நகல்' படத்தின் மூலமாக, தமிழ் திரையுலகில் நாயகியாகவும் அறிமுகமாகிறார் 'டப்ஸ்மாஷ்' மிருணாளினி. இயக்குநர் சசி மற்றும் சுசீந்திரன் ஆகியோரிடம் இணை இயக்குநராக பணியாற்றிய சுரேஷ் எஸ். குமார் என்பவர் இப்படத்தை இயக்குகிறார்.

English summary
Dubsmash videos of Mirnalini are viral among social media. She is acting as a heroine in the film 'Nagal'. Now, Mirnalaini plays a prominent role in Vijay Sethupathi's 'Super Deluxe'.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil