டப்ஸ்மேஷ் புகழ் மிருணாளினி தெலுங்கு படத்தில் போட்ட கெட்ட ஆட்டம்! வைரலாகும் வீடியோ!
Recommended Video
சென்னை: டப்ஸ்மேஷ் வீடியோக்களின் மூலம் பிரபலமான மிருணாளினி தெலுங்கு படம் ஒன்றில் போட்ட செக்ஸி டான்ஸ் வீடியோ வைரலாகி வருகிறது.
மிருணாளினி ரவி இன்ஜினியரிங் முடித்துவிட்டு பெங்களூரில் உள்ள ஒரு ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். டப்ஸ்மேஷ் வீடியோக்கள் மூலம் பிரபலமான மிருணாளினிக்கு அதன்மூலமாகவே பட வாய்ப்புகள் கதவை தட்டின.
இயக்குநர் சுரேஷ்குமார் இயக்கத்தில் நகல் என்ற படத்தின் மூலம் தமிழ் திரையுலகுக்கு நடிகையாக அறிமுகமானார். இந்நிலையில் சமீபத்தில் வெளியான சூப்பர் டீலக்ஸ் படத்திலும் நடித்திருந்தார் மிருணாளினி.

வால்மீகி படம்
மிருணாளினி தொடர்ந்து தமிழ் தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் தெலுங்கில் இவர் வால்மீகி என்ற படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடியுள்ளார்.

ஜிகர்தண்டா ரீமேக்
தமிழில் வெளியான ஜிகர்தண்டா படத்தின் ரீமேக்தான் வால்மீகி. இந்த படம் கடந்த 20 ஆம் தேதி திரைக்கு வந்தது. இந்த படத்திற்கு மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

தொப்புள் தெரிய
இதில் ஒரு பாடலுக்கு ஆடியுள்ள மிருணாளினி கறுப்பு நிற சேலையில் தொப்புள் தெரிய கவர்ச்சியை அள்ளிக்கொட்டி விருந்து படைத்துள்ளார். வளைத்து நெளிந்து நடனம், கண்ணடிப்பது, முத்தம் கொடுப்பது என கற்ற மொத்த வித்தையையும் இந்தப்பாடலில் இறக்கியிருக்கிறார் மிருணாளினி.

தீயாய் பரவும் வீடியோ
அவரது வீடியோவை பார்த்த ரசிகர்கள், நம்ம டப்ஸ்மேஷ் மிருணாளினியா என வியப்படைந்துள்ளனர். மிருணாளியின் அந்த கெட்ட ஆட்டம் போட்ட வீடியோ சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது.


Click it and Unblock the Notifications











