Trisha - ஏங்க திரிஷா மக்களை பற்றி கவலை இருக்கா உங்களுக்கு?.. இதெல்லாம் ரொம்ப ஓவர்.. விமர்சிக்கும் ரசிகர்கள்

சென்னை: Trisha(திரிஷா) திரிஷா போட்டிருக்கும் ஒரு பதிவால் அவரை ரசிகர்களில் ஒருதரப்பினர் விமர்சித்து வருகின்றனர்.

கோலிவுட்டில் பல வருடங்களாக டாப் நடிகையாக வலம் வந்துகொண்டிருப்பவர் நடிகை திரிஷா. ஜோடி படத்தில் சிறிய கேரக்டரில் அறிமுகமான அவர் மௌனம் பேசியதே படத்தின் மூலம் ஹீரோயினாக மாறினார். பிறகு விஜய், அஜித், விக்ரம், சூர்யா, சிம்பு, தனுஷ் என பல ஹீரோக்களுடன் ஜோடி போட்டவர் மன்மதன் அம்பு, தூங்கா வனம் படங்களில் கமலுடனும், பேட்ட படத்தில் ரஜினியுடனும் நடித்தார்.

Due to a post posted by Trisha some of her fans are criticizing her

கம்பேக் திரிஷா: இடையில் சில வருடங்கள் அவருக்கு பட வாய்ப்புகள் குறைந்திருந்தன. அப்படிப்பட்ட நிலையில் 96 படத்தில் நடித்தார். படம் மெகா ஹிட்டாகி அவருக்கு கம்பேக்காக அமைந்தது. அதனையடுத்து வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் குந்தவை கதாபாத்திரத்தை ஏற்று கலக்கியிருந்தார் அவர். இனி குந்தவை என்றாலே திரிஷாதான் என ரசிகர்கள் சொல்ல ஆரம்பித்திருக்கின்றனர்.

லியோ, விடாமுயற்சி: அவரது நடிப்பில் கடைசியாக லியோ திரைப்படம் வெளியானது. விஜய் ஹீரோவாக நடித்திருந்த அந்தப் படம் சுமாரான வரவேற்பையே பெற்றது. இருந்தாலும் பல வருடங்களுக்கு பிறகு விஜய்யும், திரிஷாவும் ஜோடி சேர்ந்து நடித்ததை ரசிகர்கள் வெகுவாகவே ரசித்தனர். அடுத்ததாக அஜித்துடன் அவர் விடாமுயற்சி படத்தில் நடித்துவருவதாக கூறப்படுகிறது.

விலங்குகள் மீது பிரியம்: நடிகை திரிஷாவுக்கு நாய்கள் மீது அளவுக்கடந்த பாசம். தனது வீட்டிலும் செல்ல பிராணியை வளர்த்துவரும் அவரும் தெருக்களில் அடிபடும் நாய்கள் மீதும் இரக்கம் காட்டக்கூடியவர். இந்நிலையில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு ஸ்டோரி வைத்திருக்கிறார் திரிஷா. அதாவது, ப்ளூ க்ராஸ் அமைப்பு சார்பில் அடிபட்ட நாய்கள் மீட்கப்பட்டு சிகிச்சை அளித்து வளர்க்கப்படுகின்றன.

ஆனால் சமீபத்தில் உருவான மிக்ஜாம் புயல் இந்த சரணாலயத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. 1800க்கும் மேற்பட்ட விலங்குகள் இருக்கின்றன. நோய்வாய்ப்பட்ட விலங்குகளை நாங்கள் உயரமான இடங்களுக்கு மாற்றினோம், அவற்றைக் காப்பாற்ற எங்கள் குழு அயராது உழைத்தது. சேதமடைந்த தங்குமிடம், கூரை மற்றும் சிசி டிவி சிஸ்டத்தை சரி செய்ய எங்களுக்கு உதவி தேவை. உங்கள் நன்கொடை பெரிதும் பாராட்டப்படும்" என குறிப்பிட்டிருக்கும் வீடியோவை பகிர்ந்திருக்கிறார்.

விமர்சனம்: இதனை பார்த்த ரசிகர்களில் ஒருதரப்பினர் திரிஷாவுக்கு இரக்க குணம் அதிகம் என தங்களது பாராட்டை தெரிவித்துவருகின்றனர். அதேசமயம் மற்றொரு தரப்பினரோ, நாய்கள் மீது இரக்கம் காட்டுவது தவறு ஒன்றும் இல்லை. அதேசமயம் மிக்ஜாம் புயலால் சென்னை மக்களும் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களுக்கு தைரியம் சொல்லும் விதமாக ஒரு பதிவோ இல்லை நிதியுதவியோ திரிஷா செய்திருக்கலாம். நாய்கள் மீது காட்டும் அக்கறையை மனிதர்கள் மீதும் கொஞ்சம் காட்டலாமே என அவரை விமர்சிக்க தொடங்கியிருக்கின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X