கொரோனாவால் நிறுத்தப்பட்ட கார்த்தியின் சர்தார்...பயனற்று கிடக்கும் ரூ.2 கோடி பிரம்மாண்ட செட்

சென்னை : கார்த்தி நடிப்பில் சமீபத்தில் வெளி வந்த சுல்தான் படம் தியேட்டர் மற்றும் ஓடிடி தளத்தில் பிரம்மாண்ட வெற்றியை பெற்றுள்ளது. கொரோனா தொற்று பரவல் காலத்திலும் பாக்ஸ் ஆபீசில் நல்ல வரவேற்பை பெற்றது.

இதைத் தொடர்ந்து பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் சர்தார் படத்தில் நடித்து வருகிறார் கார்த்தி. இந்த படத்தில் கார்த்தி இரட்டை வேடத்தில் நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக ராக்ஷி கன்னா, ரஜிஷா விஜயன் ஆகியோர் நடிக்கின்றனர். இதில் லேட்டஸ்ட் தகவலாக, இந்த படத்திற்காக ரூ.2 கோடி செலவில் பிரம்மாண்ட செட் அமைக்கப்பட்டுள்ளது.

Due to increasing COVID 19 cases, Karthis Sardar shooting halted

தற்போது பெருந்தொற்று காலம் என்பதால் படத்தின் முக்கிய காட்சிகளை இந்த செட்டில் எடுக்க படக்குழு திட்டமிட்டிருந்தது. இதற்காக தான் ரூ.2 கோடி செலவழித்து மிக பிரம்மாண்டமாக இந்த செட்டை அமைத்தனர். ஆனால் கொரோனா தொற்று அதிகரித்து வருவதன் காரணமாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளது.

இதனால் ஒரே சமயத்தில் பல சிறிய காட்சிகளை எடுத்து முடித்து விட்டு, பிறகு இந்த செட்டில் முக்கிய காட்சிகளை படமாக்கும் முடிவிற்கு படக்குழு வந்துள்ளது. இதனால் ரூ.2 கோடி செலவழித்து, அவசர அவசரமாக போடப்பட்ட பிரம்மாண்ட செட் தற்போது பயன்பாடு இல்லாமல் கிடக்கிறது.

ஏற்கனவே மணிரத்னம் இயக்கும் வரலாற்று படமான பொன்னியின் செல்வனில் நடித்து வரும் கார்த்தி, தற்போது சர்தார் படத்திலும் நடித்து வருகிறார். ஒரே நேரத்தில் 2 படங்களில் நடித்து வரும் கார்த்தி, இவற்றை முடித்து அடுத்தடுத்து பல படங்களிலும் நடிக்க கமிட் ஆகி உள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X