விஸ்வரூபம் எடுக்கும் சிவகார்த்திகேயன்-இமான் விவகாரம்.. அயலான் என்னவாகும்.. பதற்றத்தில் படக்குழு!
சென்னை: சிவகார்த்திகேயன் மற்றும் இமான் விவகாரம் பூதாகரமாகி உள்ள நிலையில், பெரும் பொருட்செலவில் எடுக்கப்பட்டுள்ள அயலான் படம் என்ன ஆகும் என்ற பதற்றத்தில் படக்குழு இருக்கிறது.
இசையமைப்பாளர் இமான் பேட்டி ஒன்றில், சிவகார்த்திகேயனுடன் இந்த ஜென்மத்தில் சேர்ந்து பயணிக்க மாட்டேன். அவர் எனக்கு செய்தது மிகப்பெரிய துரோகம். அதை என்னால் வெளியில் சொல்ல முடியாது.

அவர் செய்த துரோகம் எனக்கு தாமதமாகத்தான் தெரிந்தது. பல விஷயங்களை நான் மூடி மறைக்கிறேன் என்றால் அதற்கு காரணம் என் குழந்தைகளின் எதிர்காலம் தான் என்று கூறியிருந்தார்.
சிவகார்த்திகேயன்-இமான்: இமான் பேட்டியில் இப்படி பட்டும்படாமல் சொன்னது இணையத்தில் மிகப்பெரிய புயலை கிளப்பி உள்ளது. இமானுக்கு அண்மையில் விவாகரத்தான நிலையில், இமான் மற்றும் மோனிகா விவாகரத்திற்கு சிவகார்த்திகேயன் தான் காரணம் என்று சோசியல் மீடியாவில் செய்தி பரவியது.
ஆட்களை வைத்து மிரட்டினார்: சினிமா பிரபல பத்திரிக்கையாளர் ஒருவர், சிவகார்த்திகேயன் இந்த விஷயத்தை வெளிப்படையாக பேசி இருந்தாலே பிரச்சனை நீர்த்துப்போகி இருக்கும். ஆனால், சிவகார்த்திகேயனோ, எதிராக வீடியோ வெளியிட்ட யூடியூப் தளத்தை ஆட்களை வைத்து மிரட்டி வருகிறார். இமானை டேமேஜ் செய்யும் விதமாகவும் வேலைகளை செய்து வருகிறார். இதற்கான ஆதாரம் என்னிடம் இருக்கிறது இதை எப்போது வேண்டுமானாலும் வெளியிடுவேன் என்று பேசி உள்ளார்.
ரசிகர்கள் ஏமாற்றம்: கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக இந்த விவகாரம் இணையத்தில் கொளுந்துவிட்டு எரிந்து கொண்டு இருக்கும் நிலையில், இதுகுறித்து சிவகார்த்திகேயன் வாயை திறக்காமல் தனது வேலையைப் பார்த்துக்கொண்டு இருந்தது அவரது ரசிகர்களை ஏமாற்றமடையச் செய்தது.

பதற்றத்தில் படக்குழு: இந்நிலையில், மிகப்பெரிய பொருட் செலவில் உருவான அயலான் திரைப்படம் 2024ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு வெளியாக உள்ளது. இந்த நேரத்தில் சிவகார்த்திகேயன் குறித்து அவரின் நடவடிக்கை குறித்தும் தொடர்ந்து வந்து கொண்டு இருக்கும் செய்தியால் அது படத்தை பெரும் அளவு பாதிக்கும் என்ற பதற்றத்தில் படக்குழு உள்ளது.
மார்க்கெட் சரியும்: ஜென்டில்மேன் என்று நினைத்த சிவகார்த்திகேயன் இப்படிப்பட்ட நபரா..? என்று சிவகார்த்திகேயன் ரசிகைகள் அவர் மீது கோபத்தில் உள்ளனர். இந்த நேரத்தில் அயலான் படம் வெளியானால் அது சிவகார்த்திகேயனின் மார்க்கெட் சரிய மிகப்பெரிய காரணமாக அமைந்துவிடும் என்பதால், அயலான் படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக கோடம்பாக்கம் வட்டாரத்தில் பேச்சு எழுந்துள்ளது. இது எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை.


Click it and Unblock the Notifications











