சீனாவில் கொரானா பீதி... லொகேஷனை மாற்றியது கமலின் 'இந்தியன் 2' டீம்... இத்தாலியில் ஷூட்டிங்!

By

Recommended Video

Indian 2 படப்பிடிப்பில் கிரேன் விழுந்து விபத்து

சென்னை: கொரானா பீதி காரணமாக, சீனாவில் நடத்தப்பட இருந்த இந்தியன் 2 படத்தின் ஷூட்டிங் சீனாவுக்கு மாற்றப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் இரண்டு வேடங்களில் நடித்து 1996 ஆம் ஆண்டு வெளியான படம் 'இந்தியன்'.

மனிஷா கொய்ராலா, ஊர்மிளா மடோன்கர், சுகன்யா, நெடுமுடிவேணு, கவுண்டமணி உட்பட பலர் நடித்திருந்த இந்தப் படம், சூப்பர் ஹிட்டானது.

இரண்டாம் பாகம்

இரண்டாம் பாகம்

இதன் இரண்டாம் பாகத்தை இயக்குனர் ஷங்கர் இப்போது இயக்கி வருகிறார். சித்தார்த், நெடுமுடிவேணு, காஜல் அகர்வால், ரகுல் பிரீத் சிங், பாபி சிம்ஹா, பிரியா பவானி சங்கர், டெல்லி கணேஷ் உட்பட பலர் நடிக்கின்றனர். அனிருத் இசை அமைக்கும் இந்தப் படத்துக்கு ரத்னவேலு ஒளிப்பதிவு செய்கிறார். ஷூட்டிங் தொடர்ந்து நடந்து வந்தது.

ஆக்‌ஷன் காட்சிகள்

ஆக்‌ஷன் காட்சிகள்

இதன் இரண்டாவது ஷெட்யூல் போபாலில் நடந்தது. அங்கு நடந்தப் படப்பிடிப்பில் சுமார் இரண்டாயிரம் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட்களுடன் கமல் மோதும் ஆக்‌ஷன் காட்சிகள் படமாக்கப்பட்டன. நடிகை ரகுல் பிரீத் சிங்கும் இந்தப் படப்பிடிப்பில் கலந்துகொண்டார். அடுத்த கட்டப் படப்பிடிப்பு குவாலியரில் நடந்தது.

ஆபரேஷன்

ஆபரேஷன்

இந்நிலையில், கடந்த சில வருடங்களுக்கு முன் நடிகர் கமல்ஹாசனுக்கு காலில் அறுவை சிகிச்சை நடந்தது. அப்போது பொருத்தப்பட்டிருந்த கம்பியை அகற்றுவதற்கான சிகிச்சை கடந்த சில மாதங்களுக்கு முன் நடந்தது. இதனால் படப்பிடிப்பில் கலந்துகொள்ளாமல் இருந்தார் கமல்ஹாசன். இப்போது அவர் ரெடியானதை மீண்டும் படப்பிடிப்பு தொடங்கியது.

காஜல் அகர்வால்

காஜல் அகர்வால்

சென்னை பூந்தமல்லியில் உள்ள ஈவிபியில் பிரமாண்ட அரங்கம் அமைத்து நடத்தப்பட்ட படப்பிடிப்பில் நடிகை காஜல் அகர்வாலும் கலந்துகொண்டார். 85 வயது பாட்டியாக அவர் நடிப்பதாகக் கூறப்படுகிறது. இதற்காக அவருக்கு ஸ்பெஷல் மேக்கப் போடப்பட்டு படப்பிடிப்பு நடந்து வருகிறது. இங்கும் ஆக்‌ஷன் காட்சிகள் படமாக்கப்பட்டு வருவதாகத் தெரிகிறது..

கிளைமாக்ஸ்

கிளைமாக்ஸ்

இந்நிலையில், முதல் பாகத்தில் இந்தியன் தாத்தா மீண்டும் வருவது போல கிளைமாக்ஸ் காட்சி அமைக்கப்பட்டிருந்தது. இரண்டாம் பாகத்தில், அவர் சீனாவில் இருந்து இந்தியா வருவது போல கதை அமைக்கப்பட்டிருந்ததாம். இதற்காக சீனா சென்று படப்பிடிப்பை நடத்த முடிவு செய்திருந்ததாகவும் கொரானா பீதி காரணமாக, கதையை இத்தாலியாக மாற்றியுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து இத்தாலி சென்று படமாக்க உள்ளனர் என்கிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X