தள்ளிப்போகும் விடுதலை 2.. டிமிக்கி கொடுக்கும் விஜய்சேதுபதி.. என்னத்தான் பிரச்சனையோ!

சென்னை: நடிகர் விஜய்சேதுபதி விடுதலை 2 திரைப்படத்தின் படப்பிடிப்புக்கு கால்ஷூட் கொடுக்காமல் தாமதமாக்கி வருவதால், வெற்றிமாறன் கோவத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.

காமெடி நாயகனாக இருந்து முழு நேர சீரியஸ் நாயகனாக விடுதலை படம் மூலம் மாறியவர் சூரி. காவல் அதிகாரியாக விடுதலை படத்தில் நடித்திருந்த இவர், தனக்கு இன்னொரு முகம் இருக்கிறது என்பதை இந்த படத்தின் மூலம் நிரூபித்தார்.

Due to Vijay Sethupathis call shoot problem, the shooting of viduthalai 2 has been delayed

விடுதலை படத்தின் முதல் பாகம் மார்ச் மாதம் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்தது.

விடுதலை: முதல் பாகத்தில் நாயகன் சூரியையும் கிராம மக்களையும் சுற்றி நிகழுவது போல படத்தின் கதையம்சம் இருந்தது. ஆனால், இரண்டாம் பாகத்தில் விஜய் சேதுபதியின் ஃப்ளாஷ் பேக் உள்ளிட்ட அம்சங்கள் காண்பிக்கப்பட உள்ளன. இதன் படப்பிடிப்பு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைப்பெற்றது. குறிப்பாக சிறுமலை எனும் இடத்தில் பெரும்பாலான படப்பிடிப்புகள் நடைப்பெற்று வருகின்றன.

டிமிக்கி கொடுக்கும் விஜய்சேதுபதி: விடுதலை இரண்டாம் பாகத்திலும் சில புதிய கதாப்பாத்திரங்கள் வரவுள்ளன. அதிலும் முக்கியமாக விஜய் சேதுபதியின் மனைவி கதாப்பாத்திரத்தில் பிரபல மலையாள நடிகை ஒருவர் நடிக்க இருக்கிறார். இதுநாள் வரை கதாநாயகனாக நடித்து வந்த விஜய்சேதுபதி, மாஸ்டர் படத்தின் வெற்றிக்குபின் தொடர்ந்து, வில்லனாக நடித்து வருகிறார்.

இதனால், கணிசமான படங்களை கையில் வைத்து இருக்கும் விஜய்சேதுபதி, கால்ஷீட் பிரச்சனையால் விடுதலைப படப்பிடிப்பில் இன்னும் கலந்து கொள்ளவே இல்லையாம். இதனால் தான் இப்போது இந்த படப்பிடிப்பு தாமதமாகி வருவதாக கூறப்படுகிறது.

கோபத்தில் வெற்றிமாறன்: சூரியின் கதாபாத்திரம் படமாக்கப்பட்டுவிட்ட நிலையில், விஜய் சேதுபதி சம்பந்தமான காட்சிகள் இன்னும் படமாக்கப்படவில்லை. இந்த படத்தை முடித்துவிட்டு வாடிவாசல் கவனம் செலுத்தலாம் என்று நினைத்தால், இன்னும் விடுதலை 2கதையே முடியாமல் ஜவ்வுபோல இழுத்துக்கொண்டே இருப்பதால் வெற்றிமாறன் கடும் கோவத்தில் இருப்பதாக கோலிவுட் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X