twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    கொரோனா விதிகளை மீறியதாக வழக்கு... மம்முட்டியை சிக்க வைத்த வைரல் ஃபோட்டோ

    |

    கோழிக்கோடு : கோவிட் 19 கட்டுப்பாட்டு விதிகளை மீறியதாக மலையாள சினிமா மெகாஸ்டார் மம்முட்டி மீது கேரள போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். விதிகளை மீறி கூட்டம் கூட்டயதாக மொத்தம் 300 பேர் மீது வழக்கு போடப்பட்டுள்ளது.

    நாடு முழுவதும் கொரோனா பரவல் மீண்டும் அதிகரிக்கத் துவங்கி உள்ளது. மூன்றாவது அலை எப்போது வேண்டுமானாலும் வரலாம் என்ற நிலை உள்ளது. இதனால் பல மாநிலங்களில் மீண்டும் கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டு வருகிறது.

    அதிலும் கேரளாவில் தான் நாட்டிலேயே அதிக அளவு தினசரி கொரோனா பாதிப்பு இருந்து வருகிறது. தினசரி கொரோனாராவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை 18,000 க்கும் மேல் உள்ளது. அத்துடன் கொரோனா உயிழப்புக்களும் கேரளாவில் தான் அதிகம்.

    6 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இணையும் தனுஷ்,அனிருத் கூட்டணி! 6 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இணையும் தனுஷ்,அனிருத் கூட்டணி!

    மூன்றாம் அலை எச்சரிக்கை

    மூன்றாம் அலை எச்சரிக்கை

    இதனால் கொரோனா பரவலை தடுக்க கேரள அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. வார இறுதி நாட்களில் முழு ஊடரங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இருந்தாலும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதனால் கேரளாவில் தான் முதலில் மூன்றாம் அலை ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக மருத்துவ நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

    மம்முட்டியை பார்க்க கூடிய கூட்டம்

    மம்முட்டியை பார்க்க கூடிய கூட்டம்

    இந்நிலையில் கோழிக்கோட்டில் மருத்துவமனை ஒன்றில் கூடுதல் மருத்துவ வசதி பிரிவினை திறந்து வைக்க நடிகர் மம்முட்டி, டைரக்டர் ரமேஷ் பிசரோடி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக அழைக்கப்பட்டுள்ளனர். இந்த தகவல் பரவியதும் மம்முட்டியை பார்ப்பதற்காக ஏராளமான கூட்டம் அப்பகுதியில் கூடி உள்ளது.

    மம்முட்டி மீது வழக்கு

    மம்முட்டி மீது வழக்கு

    கொரோனா கட்டுப்பாட்டு விதிகள் அமலில் உள்ள நிலையில் விதிகளை மீறி ஒரே நேரத்தில் அதிகமாக கூட்டத்தை கூட்டியதால் மம்முட்டி, ரமேஷ் பிசரோடி மற்றும் மேலும் 300 பேர் மீது கேரள தொற்று நோய் தடுப்பு சட்டப்பிரிவு 4,5 மற்றும் 6 பிரிவுகளில் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மருத்துவமனை நிர்வாக இயக்குனர், தலைமை செயல் அதிகாரி உள்ளிட்டோர் மீதும் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

    சிக்க வைத்த ஃபோட்டோ

    சிக்க வைத்த ஃபோட்டோ

    ஆகஸ்ட் 3 ம் தேதியன்று மருத்துவமனையில் ரோபோ உதவியுடன் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்யும் பிரிவை தான் மம்முட்டி திறந்து வைத்துள்ளார். இது தொடர்பான ஃபோட்டோக்களும், வீடியோக்களும் 2 நாட்களுக்கு முன் இணையத்தில் வெளியாகி, வைரலானது. இதைத் தொடர்ந்தே மம்முட்டி உள்ளிட்டோர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.

    போலீசார் குற்றச்சாட்டு

    போலீசார் குற்றச்சாட்டு

    இது பற்றி போலீசார் கூறுகையில், இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் சமூக இடைவெளியை பின்பற்றவில்லை. நோய் பரவல் குறித்து கண்டுகொள்ளவும் இல்லை. இந்த நிகழ்ச்சி தொடர்பான ஃபோட்டோக்கள், வீடியோக்கள் ஆதாரங்களின் அடிப்படையிலேயே வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என்கின்றனர்.

    Recommended Video

    South Celebrity Then and Now Photoshop Looks | Surya, Ajith, Dulquer Salaman - Shameem Lukman
    நாங்க ரூல்ஸ் மீறல

    நாங்க ரூல்ஸ் மீறல

    அதே சமயம் மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் கூறும் போது, கொரோனா தடுப்பு விதிகள் அனைத்தும் மருத்துவமனைக்குள் பின்பற்றப்பட்டது. ஆனால் சினிமா பிரபலம் என்பதால் எதிர்பாராத விதமாக அதிக அளவில் கூட்டம் கூடி விட்டதால் எங்களால் கட்டுப்படுத்த முடியாமல் போனது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    English summary
    Kerala police have registered a case against Malayalam cinema megastar Mammootty for violating Govt 19 rules. A total of 300 people have been prosecuted for violating the rules.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X