துல்கர் சல்மான் படத்தின் மற்றுமொரு மாஸான போஸ்டர் வெளியானது!

சென்னை : தென்னிந்திய ரசிகர்களுக்கு மிகவும் பரிச்சயமான நடிகர் துல்கர் சல்மான் ஹிந்தியில் கர்வான் என்ற படத்தின் மூலம் அறிமுகமாகினார்.

கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் பிளாக்பஸ்டர் வெற்றிக்கு பிறகு தற்போது தமிழில் ஹேய் சனாமிகா என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இயக்குனர் ரோஷன் இயக்கத்தில் துல்கர் போலீஸ் அதிகாரியாக நடித்து வரும் சல்யூட் படத்தின் போஸ்டர் மற்றும் டீசர் ஏற்கனவே வெளியாகி வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது மற்றுமொரு மாஸான போஸ்டரை வெளியிட்டுள்ளது படக்குழு.

கண்மணிகளின் மனதில்

கண்மணிகளின் மனதில்

ஓகே கண்மணி படத்தின் மூலம் தமிழ்நாட்டில் உள்ள கண்மணிகளின் மனதில் கனவுக் கண்ணனாக வட்டமிட்டுக் கொண்டிருக்கும் நடிகர் துல்கர் சல்மான் மலையாளம் மற்றும் தமிழ் படங்களில் தொடர்ந்து நடித்து மிகவும் பிரபலமாக இருப்பவர். ஹிந்தியில் கர்வான் என்ற படத்தில் நடித்து அங்கும் அறிமுகத்தை கொடுத்தவர் அதைத்தொடர்ந்து தி ஜோயா ஃபேக்டரி படத்தில் நடித்து அங்கும் ரசிகர்களைக் கொண்டுள்ளார்.

ஃபேவரிட் திரைப்படமாக

ஃபேவரிட் திரைப்படமாக

சென்ற ஆண்டு எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல் வெளியாகி சக்கை போடு போட்டு வசூலை வாரிக் குவித்த கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் தற்போது அனைவரின் ஃபேவரிட் திரைப்படமாக உள்ளது. அதைத் தொடர்ந்து பிருந்தா மாஸ்டர் இயக்குனராக அறிமுகமாகும் ஹேய் சனாமிகா என்ற படத்தில் தற்போது துல்கர் சல்மான் நடித்து வருகிறார்

போலீஸ் அதிகாரியாக

போலீஸ் அதிகாரியாக

நடிப்பதில் மட்டுமல்லாமல் தயாரிப்பிலும் ஈடுபட்டுள்ள துல்கர் சல்மான் சொந்த தயாரிப்பில் ரோஷன் இயக்கத்தில் சல்யூட் என்ற படத்தில் நடித்து வருகிறார். மிரட்டும் போலீஸ் அதிகாரியாக வருகிறார். சல்யூட் படத்தின் போஸ்டர் மற்றும் டீசர் ஏற்கனவே வெளியாகி இணையதளத்தை கலக்கிய நிலையில் தற்போது மற்றுமொரு போஸ்டரை குழு வெளியீட்டு மாஸ் காட்டியுள்ளது.

வாக்கிடாக்கியில்

வாக்கிடாக்கியில்

இதில் துல்கர் சல்மான் கட்சி ஊர்வலத்தில் நடுவே வாக்கிடாக்கியில் பேசிக் கொண்டிருப்பது போல கையில் லத்தியுடன் மாஸாக நிற்கிறார். மேலும் இந்த போஸ்டர் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. கொரோனா பரவல் காரணமாக இந்த படத்தின் வெளியீட்டு தேதி தள்ளிவைக்கப்பட்டுள்ளது என கூறப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X